எட்டாவது அத்தியாயம் (அக்ஷரப்ரஹ்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத அஷ்டமோ அத்யாய:। அக்ஷரப்ரஹ்ம யோகம்(மரணத்திற்கு பின்னால்) |
அர்ஜுன உவாச। |
கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம। அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே॥ 8.1 ॥ |
அர்ஜுனன் கேட்டது : மனிதருள் சிறந்தவனே ! பிரம்மம் எது ? ஆன்மா எது ? அதிபூதம் எது ? அதிதெய்வம் என்று எது சொல்லபடுகிறது ?
அதியஜ்ஞ: கதம் கோ அத்ர தேஹே அஸ்மிந்மதுஸூதந। ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோ அஸி நியதாத்மபி:॥ 8.2 ॥ |
கிருஷ்ணா ! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார் ? அவர் எப்படி இருக்கிறார்?, சுயகட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் உன்னை எப்படி நினைக்கிறார்கள் ?
ஸ்ரீபகவாநுவாச। |
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே। பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥ 8.3 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: பிரம்மம் அழிவற்றது, மேலானது, அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லபடுகிறது. உயிர்களை உண்டாக்கி வளர செய்வதாகிய வேள்வி கர்மம் எனபடுகிறது.
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்। அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥ 8.4 ॥ |
உடல் தரித்தவர்களுள் உயர்தவனே ! அழியும் பொருள் அதிபூதம் எனபடுகிறது. உடம்பில் உறைபவன் அதிதெய்வம், இந்த உடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கின்றேன்.
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்। ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஷய:॥ 8.5 ॥ |
மரண காலத்தில் யார் என்னையே நினைத்தவாறு உடம்பை விட்டு செல்கிறானோ அவன் என் நிலையை அடைகின்றான். இதில் சந்தேகம் இல்லை.
யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்। தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥ 8.6 ॥ |
குந்தியின் மகனே ! இறுதி காலத்தில் எந்த பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்த பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகின்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாவது அத்தியாயம் (அக்ஷரப்ரஹ்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, அதிபூதம், யோகம், பகவத்கீதை, அக்ஷரப்ரஹ்ம, கிம், அத்தியாயம், எட்டாவது, ஸ்ரீமத், உடம்பில், எப்படி, காலத்தில், கலேவரம்।, எனபடுகிறது, அவன், அந்த, பொருளையே, அடைகின்றான், யார், உடம்பை, நினைத்தவாறு, அதிதெய்வம், ஸ்ரீ, இந்து, gita, bhagavad, ப்ரஹ்ம, பிரம்மம், கதம், சொல்லபடுகிறது, ஆன்மா, தேஹே