இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய் - இயற்கை மருத்துவம்

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம், இந்திரிய, வெண்டைக்காய், இயற்கை, சரிக்கட்டும், நஷ்டத்தை, வந்தால், விடும், சீரகம், medical, medicine, உணவு