சீதளத்தை போக்கும் சுரைக்காய் - இயற்கை மருத்துவம்

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.
கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜPரணத்தை உண்டாக்கி விடும்.
சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீhpய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.
ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீதளத்தை போக்கும் சுரைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம், போக்கும், இயற்கை, சுரைக்காய், சீதளத்தை, சுரைக்காய் , தாகத்தை, medicine, medical