உடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ - இயற்கை மருத்துவம்
வாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம். வெகு சுவையாகவே இருக்கும்.
பேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம்.
இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால் எரிச்சல் நீங்கும்.
வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.
வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது.
வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும்.
வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும்.
வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவம், கலந்து, இயற்கை, உடம்புக்கு, நீங்கும், எரிச்சல், மருந்தாகும், சஞ்சீவினி, வாழைப்பூ , கிராணி, ரத்தக், தோலா, வாழைப்பூவை, இரண்டு, உட்கொண்டால், தயிரைக், சாற்றில், நறுக்கி, சஞ்சீவி, வாழைப்பூ, medicine, medical, போன்றது, சற்று, இருக்காது, வாழைப், இருக்கும், சமைத்துச்