புரிதல் - சிரிக்க-சிந்திக்க
”ஏன் அழுகிறாய்?”என்று அங்கே இருந்த பார்வையற்ற மூன்று பெண்கள் கேட்டனர்.
‘என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.திடீரென இறந்து விட்டது.’ என்றாள் பிச்சைக்காரி.
”பால் எப்படியிருக்கும்?” எனக் கேட்டாள் ஒரு பார்வையற்ற பெண்.
’வெள்ளையாக இருக்கும்,’என்றார் அங்கிருந்த ஒருவர்.
வெள்ளை எப்படி இருக்கும் என அடுத்த பார்வையற்ற பெண் கேட்டாள்.
கொக்கு மாதிரி இருக்குமென இன்னொருவர் சொன்னார்.
கொக்கு எப்படி இருக்குமென மூன்றாவது பார்வையற்ற பெண் கேட்டாள்.
உடனே ஒரு கொக்கைப் பிடித்து கொண்டு வந்து அந்தப் பெண்களின் கைகளில் கொடுத்தார்கள்.
அதைத் தொட்டுப் பார்த்தஅந்த பார்வையற்ற பெண்கள் ”இவ்வளவு பெரிய ஒரு பொருளை குழந்தையின் வாயில் திணித்தால் குழந்தை சாகாமல் என்ன செய்யும்?”
இதைப் போலத் தான் பல சமயங்களில் பல விசயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம் கருத்துக்களை அள்ளி வீசுகிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புரிதல் - சிரிக்க-சிந்திக்க, பார்வையற்ற, ஜோக்ஸ், jokes, புரிதல், சிரிக்க, கேட்டாள், சிந்திக்க, பெண், எப்படி, கொக்கு, இருக்குமென, இருக்கும், பிச்சைக்காரி, சர்தார்ஜி, நகைச்சுவை, பெண்கள்