கடி ஜோக்ஸ் 48 - கடி ஜோக்ஸ்
டாக்டர் : நீங்க ஏன் பார்க்கறீங்க?
-***-
அப்பா : எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன் : ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா : ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன் : மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
-***-
ஒருவன் : என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?
மற்றவன் : ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
-***-
மாலா : எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை.
ஹரி : ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....
-***-
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 48 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், தினமும், வெறும், நோயாளி, இடத்தில், அடிபட்ட, மத்த, மகன், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, அப்பா, ஒன்னே, அப்ப