கணவன் மனைவி ஜோக்ஸ் 8 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சி இன்னியோட பத்து வருசம் ஆகுது?
கணவன் : எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா?
கணவன் : ஆமாண்டி, நல்ல விசயங்களை மட்டும் தான் நான் ஞாபகம் வச்சிக்குவேன்.
-***-
மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
-***-
கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
-***-
மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .
கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்.
-***-
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னன்ன?
மனைவி : வேணுமா? வேண்டாமா?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 8 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், போட்டா, பிடிக்கல, இருக்கு, வேணுமா, ஏங்க, மனைவி, kadi, நகைச்சுவை, கணவன், நான்