கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது
-***-
மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.
கணவன் : எனக்கு மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.
-***-
கணவன் : காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி : ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
-***-
மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க!
கணவன் : நீ என்ன சொன்னே ?
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.
-***-
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் STD போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு...
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், மட்டும், போச்சு, வேலையும், ரொம்ப, என்ன, எனக்கு, நடக்குது, kadi, நகைச்சுவை, சண்டை, தடவை, பார்த்துட்டு