கணவன் மனைவி ஜோக்ஸ் 26 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன் : உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
-***-
கணவன் : எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம் கமலா !'
மனைவி : அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன் !'
-***-
கணவன் : ஏன் ஒரு மாதிரி இருக்க?
மனைவி : அத இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?
கணவன் : சரி விடு..
மனைவி : அதான.. நான் எப்படிப்போனா உங்களுக்கென்ன?
-***-
மனைவி : கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன் : ஏன் .. .. ? மனைவி : அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே
-***-
மனைவி : உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ’ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்..
கணவன் : பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே கடைசியா நான் மகிழ்ச்சியா இருந்தேன்...
-***-
மனைவி : இந்தாங்க லட்டு..
கணவன் : எதுக்கு..?
மனைவி : நான் கர்ப்பமா இருக்கேன்..
கணவன் : அட.. ரொம்ப சந்தோசமான விசயம் உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?
மனைவி : சொல்லலை
கணவன் : ஏன் ?
மனைவி : அடிப்பாங்க
கணவன் : அடிப்பாங்களா? என்றான் வியப்பாக! அதற்கு
மனைவி : ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன். பின்னி எடுத்துட்டாங்க
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 26 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, நான், சிரிப்புகள், ஞாபகம், இருந்தேன், மாதிரி, நகைச்சுவை, kadi, ரொம்ப, எதுக்கு