சிரிக்கலாம் வாங்க 79 - சிரிக்கலாம் வாங்க

இரு வாலிபர்கள் பேசிக்கொண்டது;
தெய்வீகக் காதல்னா என்னடா மாப்ள?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.
-***-
"என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?"
"ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"
-***-
'நேத்து நீங்க வைர நெக்லேஸ் வாங்கி தர்ற மாதிரி கனவு கண்டேங்க..!'
'இன்னிக்கு வாங்கி போட்ட மாதிரி கனவு கண்டுறு'
-***-
"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"
-***-
"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"
"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 79 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்ன, உங்க, தடுக்காம, மாதிரி, கனவு, தெய்வீகக், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, வாங்கி