சிரிக்கலாம் வாங்க 61 - சிரிக்கலாம் வாங்க
"அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறு பேரையாவது பார்ப்பாரு!"
"அவ்வளவு பிஸியா?"
"நீங்க வேற கிளினிக் வாசல நின்னு,ரோடுல போறவங்களை குறைஞ்சது நூறு போரையாவது பார்ப்பாருன்னு சொன்னேன்."
-***-
ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்!
-***-
என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..
அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு
-***-
இரண்டு நண்பர்கள்.........
""அவர் வீடு "கமகம'ன்னு வாசனையா இருக்கே ஏன்?''
""நாலு "சென்ட்' நிலத்தில் கட்டின வீடாச்சே அது!''
-***-
ஆபிஸில் பெண் B.A.வுடன் குஜாலாக இருந்த "மேனேஜருக்கு" போன் வருகின்றது....புதிதாய் வேலைக்கு சேர்ந்த "ரிசப்னிஸ்ட்" எடுக்கிறார்...
சார் உங்க மனைவிகிட்ட இருந்து போன்...!
நான் வெளியே போயிருக்கின்றதா சொல்லுமா...!
அப்ப நம்ம டிரைவர் "ரமேஷை" வீட்டுக்கு வரச்சொல்லுங்க...அப்படின்னு சொல்லுறாங்க என்ன சார் செய்வது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 61 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, சார், இருக்கு, ஏறணும், போன், மெசேஜ், குறைஞ்சது, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நூறு, நம்ம