சிரிக்கலாம் வாங்க 48 - சிரிக்கலாம் வாங்க

உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
-***-
ஏன்யா! கார் ஓட்டும்போது பெல்ட் போடலை?
நான் பேண்ட் போடும்போதுதான் பெல்ட் போடுவேன், வேஷ்டி கட்டினு இருக்கும்போது பெல்ட் போடமாட்டேன் சார்…!
-***-
"வயித்துல பண்ணவேண்டிய ஆபரேஷன் கால்லே பண்ணி வெச்சிருக்கீங்களே...டாக்டர்?"
"நீங்கதானே ஆபரேஷனைத் தள்ளிவைக்கச் சொன்னீங்க...!"
-***-
” செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!”
” போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!”
-***-
தலைவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா சொல்றது...
ஏன்... அப்படி என்ன சொன்னார்?
தன்னுடைய ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை, ‘சிங்கம் 2' பார்க்கப் போறேனு சொல்றார்....
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 48 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", பெல்ட், சிரிப்புகள், kadi, நகைச்சுவை