கேள்வி எண் 77 - சட்டக்கேள்விகள் 100
77. எனக்கும் என் அண்ணனுக்கும் சேர்த்து சொந்தமாக உள்ள கடையில் எனது பாகத்தை எப்படி விற்பனை செய்வது?
சார், எனக்கும் என்னுடைய அண்ணனுக்கும் சேர்த்து திருச்சியில் ஒரு கடை உள்ளது(Joint ownership). நான் தற்போது எனக்கான பாகத்தை விற்பனை செய்யலாம் என்றிருக்கிறேன். ஆனால் என்னுடைய அண்ணன் அவருடைய பாகத்தை விற்க முன்வருவாரா என்பது தெரியவில்லை. இந்த சொத்தில் என்னுடைய பகுதி எது என்று தெரியாத பட்சத்தில் என்னுடைய பாகத்தை எப்படி விற்பனை செய்வது? மேலும் அந்த கடையில் ஒரு வாடகை தாரர் கடந்த 30 வருடங்களாக வசித்துவருகிறார்.
- ச.கந்தசாமி, திருச்சி
பதில் :
நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில் பலருக்கு உதவியாக இருக்குமென நம்புகிறேன். பொதுவாக பிரிக்கப்படாத பாகத்தை (Undivided Share) விற்பனை செய்வதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் உங்களிடம் கடையை வாங்கியிருக்கும் நபர் தமக்கு கடை காலியாக்கித்தர வேண்டும் என்று கேட்பாராயின் உங்களுடைய பாகத்தின் குறிப்பிட்ட பகுதியினை(Demarcated) தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். குறிப்பிட்ட பகுதியினை பிரிப்பது என்பது உங்கள் இருவரின் முழு ஒத்துழைப்புடனோ அல்லது நீதிமன்றத்தின் மூலமோ மட்டுமே தீர்மானிக்க முடியும்.
சம்பந்தப்பட்ட இடத்தின் எந்த பகுதி என்று குறிப்பிடாமல் நீங்கள் பதிவு செய்யும் போது அதில் சாதாரணமாகவே வில்லங்கம் ஏற்பட்டுவிடும். அதனால் நீங்கள் முதலில் உங்களுக்கான குறிப்பிட்ட பகுதியின் வரைபடமிட்டு அனுமதி கோருங்கள். (Get your portion demarcated)
ஒருவேளை உங்கள் சகோதரர் அவருடைய போர்ஷனை விற்றுள்ளாரா என்று தெளிவு படுத்திக்கொள்ள அந்தப் பகுதிக்குட்பட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி உரிய பத்திரத்தை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம்.
சட்டப்படி உங்கள் பகுதியை விற்க உங்கள் சகோதரரின் அனுமதி எவ்விதத்திலும் தேவையில்லை என்பதே உண்மை. உங்கள் இடத்திலுள்ள வாடகைதாரரைப் பற்றி உங்கள் சொத்தினை வாங்குபவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பெற்று வரும் வாடகையினை அவரே வசூல் செய்து கொள்ள, அவருக்கு விருப்பமிருப்பின், எழுதிக்கொடுப்பதன் மூலம் உங்கள் சொத்தினை வாங்குபவர் அவரிடமிருந்து வாடகையை வசூல் செய்து கொள்ள முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, உங்கள், பாகத்தை, என்னுடைய, விற்பனை, செய்து, குறிப்பிட்ட, நீங்கள், முடியும், தீர்மானிக்க, demarcated, ஒருவேளை, கொள்ள, வசூல், சொத்தினை, பகுதியினை, அனுமதி, பதில், எப்படி, கடையில், சேர்த்து, அண்ணனுக்கும், செய்வது, அவருடைய, எனக்கும், பகுதி, என்பது, விற்க, வேண்டும்