கேள்வி எண் 55 - சட்டக்கேள்விகள் 100
55. குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றபிறகு, பொய்வழக்கு போட்டதற்காக எதிர்தரப்பு மீது வழக்கு தொடரமுடியுமா?
எனக்கு திருமணமாகி 3 வருடத்திற்கு பிறகு எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக என் மனைவி தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய மனைவி வீட்டார், என் மீதும் என்னுடைய குடும்பத்தினர் மீதும் 498A மற்றும் 304ஙி பிரிவில் போலியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் என்னிடம் ஒரு பெரிய தொகையினைசெட்டில்மென்டாக கேட்கிறார்கள். இந்தத் தொகையினை கொடுத்தால் அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து என் மனைவி இறந்ததற்கான காரணம் “புரிதல் இல்லாமலும் மற்றும் நோய்வாய்ப்பட்டதாலும்தான்” என்று கூறுவதாக சொல்கிறார்கள்.
நான் பணத்தை கொடுத்துவிட்டு, நீதிமன்றத்தில் தீர்ப்பு நகலைப் பெற்றபின், பொய்வழக்கு 304 ஙி பிரிவில், தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக நான் அவர்கள் மீது வழக்கு தொடரமுடியுமா?
- P. செந்தில்குமார், கழுகுமலை
பதில் :
சமீப காலங்களில் தொடுக்கப்படும் 498A வழக்குகளில் 98% வழக்குகள் பொய்வழக்குகளாகத்தான் உள்ளன. ஏன் சில நீதியரசர்கள் கூட இது ஒரு சட்ட தீவிரவாதம் என்றே கண்டித்துள்ளனர். நீங்கள் நிரபராதி எனும்பட்சத்தில் அதன் தன்மைகளை கொண்டு உரிய வழக்குரைஞர் மூலம் வழக்கை எதிர்கொள்ளுங்கள். செட்டில்மென்ட் செய்து நீதிமன்ற நகலை பெற்ற பிறகு அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பது சரியானதாக அமையாது. ஏனெனில் அதற்கான வலுவான ஆதாரம் இல்லை. மேலும், விவாதிக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் நடந்த செயலுக்கானதே தவிர அவர்களுடைய குடும்பத்தாரைப் பற்றி அல்ல...
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, மனைவி, வழக்கு, மீது, நான், மீதும், 498a, பிரிவில், என்னுடைய, பிறகு, தீர்ப்பு, பொய்வழக்கு, தொடரமுடியுமா, நீதிமன்றத்தில், செய்து