கேள்வி எண் 47 - சட்டக்கேள்விகள் 100
47. வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டா?
நான் சென்னையில் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். ஓரிரு நாட்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தேன். இருசக்கர வாகனத்தை மடக்கியபோது, வழக்குரைஞர் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ஆவணங்களை கேட்டபோது, தரமறுத்ததோடு, வழக்குரைஞர் அடையாள அட்டையும் காண்பிக்க மறுத்து சில வழக்குரை ஞர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தர்க்கம் செய்ததோடு, உயர்அதிகாரிகளிடம் பேசி வண்டியை எடுத்துச் சென்று விட்டார். அருகில் நின்றிருந்த வாகன ஓட்டி கள், எப்படி வழக்குரைஞரை விடுவிக்கலாம்? எங்களுக்கு ஒரு நடைமுறை, வழக்குரைஞருக்கு ஒரு நடைமுறையா? என்று கேட்ட கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.
- பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி.
பதில் :
தாங்கள் அந்த வழக்குரைஞரை விடுவித்தது சட்டப்படி நியாயமல்ல. வழக்குரைஞராக இருப்பின் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து இருப்பார். அதுமட்டுமல்ல, வாகனத்திற்கான ஆவணங்களை கட்டாயம் அதிகாரி யான தங்களிடம் காண்பிக்க வேண¢டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அவர் போலியாக கூட இருக்கலாம். மற்ற வழக்குரைஞர்கள் மூலமாக காப்பாற்றப்பட்டவர் குற்றவாளியாக கூட இருக்கலாம். உண்மையானவராக இருப்பின் அடையாள அட்டையை காண்பித்து இருப்பார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, அடையாள, வழக்குரைஞர், அட்டையை, இருப்பின், காண்பித்து, இருக்கலாம், இருப்பார், சட்டப்படி, பதில், வாகன, ஸ்டிக்கர், ஆவணங்களை, காண்பிக்க, வழக்குரைஞரை, அதிகாரி