தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழ் முஸ்லீம்கள் :
தாய்லாந்தில் சுமார் 1000 தமிழ் முஸ்லீம்கள் குடியேறியிருக்கின்றனர். இவர்களில் பலர் தாய் குடிமக்களாக மாறி விட்டனர். பாங்காங்கில் வாட்கோ பகுதியில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனர். அங்கே ஒரு மசூதியும் உண்டு. மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளிவாசல், தாய் முஸ்லிம் மசூதி இருக்கின்றது. பல மரைக்காயர் குடும்பத்தினர்கள் தாய்லாந்தில் குடியேறி இருக்கின்றனர். சுமார் 500 பேர் வைர வணிகம், துணி வணிகம் செய்கின்றனர். துணியகம், உணவு விடுதி, ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், மிளகாய், அரிசி வணிகம் செய்கின்றனர். சிலர் அரசு நிறுவனங்களிலும் பொறியாளர் களாகவும் பணிபுரிகின்றனர். மேலும் வண்ண கற்கள், அரிய வைரமான பாம்பே வைரம், சபையர், ரூபி, விலை மதிப்புள்ள கற்கள் முதலியவைகள் தொடர்பான வணிகம் செய்கின்றனர்.
தஞ்சாவூர் பாண்டிச்சேரி, காரைக்கால், கீழக்கரை, காரைக்குடி, இராமநாதபுரம், காயல்பட்டணம், சென்னை அருகேயுள்ள புளிக்காடு முதலிய தமிழ்நாட்டு நகரங்களிலிருந்து தாய்லாந்திற்குத் தமிழ் முஸ்லீம்கள் வந்தனர். சுமார் 60 பேர் மூன்று நான்கு தலைமுறை களுக்கு முன் வந்தவர்கள். பலருக்கு இப்போது தமிழ்நாட்டிலுள்ள சொந்த ஊர்களுடன் தொடர்பு இல்லை. žனர், தாய்லாந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட தமிழ் முஸ்லீம்கள் பலர் உண்டு. சிலர் இந்தியப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பெண்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர். தமிழ்நாட்டு இஸ்லாமிய திருமண முறையே பின்பற்றப்படுகிறது.
தமிழ் முஸ்லீம்கள் தமிழில் எழுத பேசத் தெரிந்தவர்கள். தமிழ் ஆர்வம் உள்ள தமிழர்கள். தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கும் தமிழர்கள். இஸ்லாம் சமயத்தில் மிகுதியானப் பற்றுள்ளவர்கள். பலர் தாய் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு தாய்லாந்திலேயே நிரந்தரமாக வாழ்கின்றனர். ஆனால் இப்போது தாய்லாந்திலேயே பிறந்த இளம் பரம்பரையினருக்குத் தமிழ்த் தெரியாது.இவர்களுக்குத் தமிழ்நாட்டுடன் குறைவான தொடர்புதான் இருக்கிறது. தாய்- மொழியையே பேசுகின்றனர். இட்லி, தோசை, புட்டு முதலியவை களைவிட சோறு, நூடுல்ஸ் இவற்றையே விரும்பி உண்கின்றனர். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த முஸ்லீம் பெண்கள் தமிழ்நாட்டுச் சேலையையே விரும்பி உடுக்கின்றனர். žயா(Shia) சன்னி, சபி, ஹநாபி என்னும் வேறுபாடுகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
மிலாடி நபி, ரம்சான் விழாக்களை சிறப்பாகக் கொண்டாடுவர். பெரும்பான்மை யோர் நோன்பு இருப்பர். தாய்லாந்திலுள்ள அயோத்திய தர்காவுக்கும் நாகூர் தர்காவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றது. தாய்லாந்தில் புகழ்வாய்ந்த தமிழ் முஸ்லீம் குடும்பத்தினர் காரைக்காலிலிருந்து வந்த மரைக்காயர் குடும்பத்தினர். இக்குடும்பத்தினரின் முன்னோர் தாய்லாந்தில் முதலில் துணிக்கடை, வைரவணிகம், கட்டிடம் கட்டும் தொழில் முதலியவற்றைத் தொடங்கினர். இன்று இக்குடும்பத்தினருக்குத் தாய்லாந்தில் மிகுதியான நிலம் சொந்தமாக உள்ளது. இக் குடும்பத்தினரே தாய்லாந்தில் வாழும் மிகப் பெரிய பணக்கார முஸ்லீம் குடும்பத்தினர் ஆவர். சமய நம்பிக்கை வேறுபாடு இருந்த போதிலும் தமிழ் இந்துக்களும் தமிழ் முஸ்லீம்களும் தாய்லாந்தில் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். தாய் தமிழ் முஸ்லீம்கள் அமைதியானவர்கள், திறமையான வணிகர்கள், தாராள மனப்பான்மை உடையவர்கள்.
தாய்லாந்தில் இன்று தமிழ் கிறிஸ்துவர்கள் சொற்ப தொகையில்தான் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். பாண்டிச் சேரியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் žனர், பிரெஞ்சு கத்தோலிக்கக் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். தமிழை மறந்து விட்டனர். இவர்களுடைய பிள்ளைகளுக்கும் தமிழ் கற்றுத்தரவில்லை.
தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் :
தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது தாய்பிராமணர்கள் தமிழ்பாடல்களான திருவெம்பாவை, திருப்பாவைகள் ஓதுவார்கள். மன்னன் இந்துக் கடவுள்களின் ஆசியைப் பெறுவதற்காக பிராமணச் சடங்குகள் செய்யப்படும். இச்சடங்குகளின் போது பாடும் தேவாரம், திருவாசம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய்லாந்தில், தமிழ், தமிழர், முஸ்லீம்கள், தாய், வணிகம், வாழும், இவர்கள், திருமணம், செய்து, செய்கின்றனர், நாடுகள், இருக்கின்றது, பலர், தமிழ்ப், தமிழ்நாட்டுத், சுமார், குடும்பத்தினர், முஸ்லீம், தமிழர்கள், தகவல்கள், இருக்கின்றனர், வந்தவர்கள், தமிழ்நாட்டு, முன், இப்போது, பெண்கள், தர்காவுக்கும், வந்த, இன்று, போது, | , விரும்பி, வாழ்கின்றனர், பெண்களைத், கொண்ட, கற்கள், தாய்லாந்திலேயே, žனர், விட்டனர், countries, tamilnadu, information, ஆசியைப், living, persons, tamils, thailand, tamil, புத்த, இல்லை, உள்ள, உண்டு, மரைக்காயர், பேர், எரிக்கின்றார்கள், இறந்தவர்களை, கோவில், எதிரில், சொந்தமாக, சிலர்