சிங்கப்பூரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
பொதுவாக 1) குற்றவாளிகளின் குடியேற்றம். 2) கட்டுப்படுத்தப் பெற்ற குடியேற்றம் 3)
தாமாக வந்த குடியேற்றம் என்ற மூன்று பிரிவில் தமிழ் மக்களின் குடியேற்ற வரவு அமையும்.
குடியேற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாகவோ, மூன்றுமோ ஒரு காலக்கட்டத்திலோ நிகழ்ந்துள்ளன.
தமிழர்களும், பிறரும் தாமாக இங்கு குடியேற வந்தமை 1857 வரை நீடித்தது. அதன்பிறகு
சில கட்டுத் திட்டங்களை அப்போதைய இந்திய அரசு கொணர்ந்தது. 1890ஆம் ஆண்டளவில்
ஒப்பந்தப் பிணைப்புக்கு உட்படாத உழைப்பாளராகிய தமிழர்கள் கணிசமான அளவுக்கு அங்குக்
குடியேறிவிட்டனர்.
1931ஆம் ஆண்டளவில் நீரிணைக் குடியேற்றங்களின் மொத்த மக்கள் தொகையில் žனர்கள் 59.6 விழுக்காடும், மலேயர்கள் 25.6 விழுக்காடும், இந்தியர்கள் 11.9 விழுக்காடும் இருந்தனர். நீரிணைக் குடியேற்றங்களில் பிறந்த எல்லா இனத்தினரும், மலேயர்களும், žனர்களும், இந்தியர்களும், யூரேசியர்களும் மற்றவர்களும் பிரிட்டிஷ் குடிமக்களாகக் கருதப்பட்டனர்; எல்லோருக்கும் சட்டப்படி சமமான உரிமைகள், சலுகைகள் அளிக்கப்பட்டன. சிவில் நிர்வாக அமைப்பின் முக்கியப் பதவிகள் ஆங்கிலேயர்வசம் இருந்தன. ஆனால் மற்ற எல்லாப் பதவிகளிலும் சேர்ந்து பணிபுரிய எல்லா இனத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. நடைமுறையில் பெரும்பான்மையான மேசைத் தொழிலாளிகளாக (white collar jobs) யுரேசியர்கள், žனர்கள், இந்தியர்கள் (தமிழர்கள் உட்பட) இருந்தார்கள். ஒருசில மலேயர்களுக்கு இப்பணிகளுக்குத் தேவையான சிறப்புத் தகுதிப் பண்பு இருந்தது. ஆகையால் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நீரிணைக் குடியேற்றப்பகுதியில் மலேயர்கள் அல்லாதவர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது, தமிழர்களின் செல்வாக்கும் ஓரளவு ஓங்கியிருந்தது எனக் கூறலாம். அலுவலக எழுத்தாளர்கள், மேற்பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள் என்றெல்லாம் பல்வேறு அலுவலர்களாகத் தமிழர்கள் இருந்தனர். கல்விப் பணியிலும் காவல் துறையிலும் அவர்களே நிறையத் தொடங்கினர். காவலர்களாக žக்கியர்களும் தமிழர்களுமே பெரும்பாலும் இடம்பெற்றனர். சிங்கப்பூரில் ஒருகாலத்தில் காவலர்களாய் இருந்த அனைவரும் தமிழர்களேயாவர். தொடக்க காலத்தில் கிறித்துவத் தொண்டமைப்புகளும் (மிஷ’னரிகளும்) அரசாங்கமும் நடத்திய பள்ளிகளில் இந்தியர்களே ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூர் ஜப்பானின் மேலாட்சியின் கீழ் மூன்று ஆண்டுகள் இருந்தது. போருக்குப்பின் மற்ற நீரிணைக் குடியேற்றங்களிலிருந்து சிங்கப்பூர் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக, சிங்கப்பூர் தனி உரிமையுள்ள நேர்தாயக ஆட்சிக்குட்பட்ட குடியேற்ற நாடாக மாறியது. 1959 ஜூன் திங்கள் முழு உள்நாட்டுத் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டது. 1963 செட்பம்பர் திங்களில் மலேசியா அமைக்கப்பட்டவுடன் சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.
சுதந்திர சிங்கப்பூர்:
ஆனால் 1965 ஆகஸ்டு 7ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு வெளியேறி ஒரு தனி முழு உரிமையுள்ள சுதந்திர நாடாக மாறியது. இன்றும் சுதந்திர சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு என அறுதியிட்டுக் கூறலாம்.
சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக 1820ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தொடக்கக் கால வளர்ச்சியில் தமிழர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். 1820ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் பிரிட்டிஷ் அரசின் கைதிகள். இவர்கள் 1823-26ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசால் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இக்கைதிகள்தான் கூறப்போனால், சிங்கப்பூரில் இருக்கும் மிகப் பழைய தமிழ்க் கோயிலான மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். புனித ஆண்டுரு கோயில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் ஜோஹ“ர் பாலம் செம்பாவங் துறைமுகம், கல்லாங் விமானநிலையம் முதலியவை தமிழர்களின் கடின உழைப்பின் சின்னங்கள் என்று கூறலாம். இத்தமிழ்க் கைதிகளும், பின்பு தொழிற்கட்டுபாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டத் தமிழர்களும், சாலைகள், இரயில்பாதை, பாலங்கள், கால்வாய்கள், அரசு கட்டிடங்கள் போன்ற பொதுநல அமைப்புகளைக் கட்டுவதில் சிறப்பான பங்கேற்றனர். ஒரு காலத்தில் எல்லாக் காவல் துறையாளர்களும் தமிழர்களே. பிறகு žக்கியர்கள் மிகுதியாகக் காவல்துறைப் பணியில் சேர்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது கல்வித் துறையிலும் தமிழர்கள் செல்வாக்கு ஓங்கியிருந்தது. சிங்கப்பூரின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க வளர்ச்சியின்போது ஆங்கில அரசும், கிறித்துவ சமயப் பரப்பாளர் பள்ளிகளும் தமிழர்களைத்தான் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இன்று வழக்குரைஞர்களாகவும், பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு அலுவலர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், தொழிற்சங்க உறுப்பினர்களாகவும் - எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் தமிழர்களை நாம் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழர் - Tamils in Singapore - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், சிங்கப்பூரில், சிங்கப்பூர், தமிழர்கள், நீரிணைக், நாடுகள், வாழும், விழுக்காடும், வளர்ச்சியில், தமிழர்களின், அரசு, கூறலாம், சுதந்திர, ஓங்கியிருந்தது, எல்லா, குடியேற்றம், தகவல்கள், தமிழ்நாட்டுத், மாறியது, முழு, நாடாக, மலேசியா, உரிமையுள்ள, துறையிலும், தொடக்க, காலத்தில், tamil, singapore, tamils, ஆண்டுகளில், பங்கேற்றனர், ஆங்கில, | , 1820ஆம், பத்தொன்பதாம், காவல், சிறப்பான, பங்கு, சிங்கப்பூரின், living, information, tamilnadu, žனர்கள், மலேயர்கள், ஆண்டளவில், தமிழர்களும், வந்த, மூன்று, குடியேற்ற, இந்தியர்கள், இருந்தனர், செல்வாக்கு, countries, தாமாக, ஆட்சியின்போது, ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ், மற்ற, அளிக்கப்பட்டது, persons