மியன்மாரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
அமைப்புக்கள் :
கீழ்கண்ட தமிழகம் சார்ந்த அரசியல், சமூக அமைப்புகள் உள்ளன.
1. திராவிட முன்னேற்றக் கழகம்
2. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
3. பர்மா இந்துத் தமிழ் மன்றம்
4. பர்மா திராவிடக் கலாச்சாரக் கழகம்
5. பர்மா தமிழர் கலாச்சாரக் கழகம் (1977)
6. மக்கள் கவி பாரதியார் முன்னேற்றக்கலை மன்றம்
7. தமிழ் இளைஞர் பொது நலக்குழு
8. பர்மா தமிழ் இளைஞர் சங்கம் (1954)
9. பர்மா ஈழ மாணவர் பொது மன்றம் (1976)
10. அறிஞர் அண்ணா அறிவகம்
11. அறவழி அன்பர்கள் குழு
12. தமிழர் முன்னேற்றக் கழகம்
ஆண்டு தோறும் அறிஞர் அண்ணா விழாவும், பொங்கலையும் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். பெரியார் நூற்றாண்டு விழாவும், பாரதியார் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டன. பர்மாவில் வீரமாமுனிவர் விழா, திருவள்ளுவர் திருநாள், டாக்டர் அம்பேத்கார் விழா, பாரதி விழா போன்றவை இச்சங்கங்களால் கொண்டாடப்படுகின்றன.
சோழர்காலத்தில் சென்ற தமிழர்கள் சோலியா முஸ்லீம்களாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் அமைப்புகள் :
1. சோலியா முசுலீம் சங்கம்
2. சோலியா முசுலீம் சன்மார்க்கச் சேவையகம்
3. சோலியா முசுலீம் மார்க்க நிதி ஸ்தாபனம்
4. பர்மா வாழ் வீர சோழன் முசுலீம் ஜமாஅத்.
தமிழர் சாதனை :
பர்மா நாட்டுத் தமிழர் தலைவர் சி. சத்தியானந்தன் ஆவார். இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் ஆவார். கடைசியாக நடந்த தேர்தலின் போது சிறையிலிடப் பட்டு தேர்தலன்று காலமாகி விட்டார். பர்மாவில் முதன் முதல் இரங்கூனில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் 'தென்னிந்திய ஓட்டல் தொழிலாளர் சங்கம்' இதன் தலைவராகப் பணியாற்றியவர். டி.எஸ்.மணி. இது போலவே 1946-இல் அகில பர்மா தமிழர் சங்கம் அமைத்தனர். இதில் முக்கிய பங்காற்றியவரும் டி.எஸ். மணி ஆவார். இவரைப் போலவே பெரியவர் பாண்டியன், ஜோசப் போன்றவர்களும் தமிழர்களுக்காக உழைத்து வருகின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் இராணுவ ஆட்சியில் தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை பாதிக்கப்பட்டுள்ளன.
வணிகம்-தொழில் புரிவோர் விபரம் :
பர்மாவில் குடியேறிய தமிழர்களில் செட்டியார்களே அதிகளவு தொழிலில் ஈடுபட்டனர். வட்டித் தொழிலிலும், நெல் ஏற்றுமதியிலும் ஈடுபட்டனர். பர்மாவில் செட்டியார்களின் 1655 கடைகளில் 5 1/2 கோடி ஸ்டெர்லிங் பவுன் மூலதனத்துடன் இயங்கி வந்தன. அப்போது அவர்களிடம் மூன்றரை லட்சம் ஏக்கர் நெல் வயல்களும் வேறு உடைமைகளும் இருந்தன. 1930-க்கு முன் மலேயாவுக்கு அடுத்த நிலையில் 400 கிட்டங்கிகளில் வட்டித்தொழில் நில அடைமானம், ஆலை நிர்வாகம், முதலிய தொழில்களில் முதலீடு செய்தனர். 1105 கிட்டங்கிகளில் கிடைத்த 75 கோடி ரூபாயில் பர்மியர்கள் கடனாக பெற்றது 35 கோடி; தமிழர்கள் வாங்கியது 40 கோடி ரூபாய்; 1929-30 இல் 5,70,000 ஏக்கர் கீழ் பர்மாவில் இவர்களுக்கு சொந்தமாகியது. இது 1938 இல் 24,68,000 ஏக்கராக உயர்ந்தது. இதுவே 30.12.1947 இல் 50 இலட்சம் ஏக்கராக உயர்ந்து விட்டது. "செட்டிநாடு பாங்" என்ற பெரிய அமைப்பையே தமிழர்கள் இயக்கினார்கள். 1938-க்குப் பிறகு எல்லாம் சரிவை நோக்கி சென்றது 1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிராக கலகம் வெடித்ததும் இரண்டாம் உலகப்போரின் போக்கும் இதற்குக் காரணமாக அமைந்தன. 1950க்குப் பிறகு அரசு அலுவலர்கள் சிறுகடை வியாபாரிகள், நெல் விவசாயிகள், மரம் அறுப்போர், தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் என்றே பெரும்பாலான தமிழர் வாழ்கின்றனர். தற்போது தட்டோன் பகுதியில் நெல் வயல் உரிமையாளராக பலர் உள்ளனர். அவர்களில் நெ.மாரிமுத்துவும் ஒருவர்.
தொகுப்பு : ப.திருநாவுக்கரசு.
பார்வை நூல்கள் :
1. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ் பண்பாடு - டாக்டர். க.த.திருநாவுக்கரசு.
2. அயல்நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்.
3. உலகத் தமிழர் இரண்டாம் பாகம் - வீரப்பனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மியன்மாரில் தமிழர் - Tamils in Myanmar - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், பர்மா, பர்மாவில், கழகம், முசுலீம், மியன்மாரில், கோடி, நெல், தமிழ், சோலியா, வாழும், நாடுகள், சங்கம், விழா, மன்றம், ஆவார், தமிழர்கள், விழாவும், வருகின்றனர், முன்னேற்றக், தமிழ்நாட்டுத், அண்ணா, தகவல்கள், பிறகு, இரண்டாம், திருநாவுக்கரசு, | , ஏக்கராக, கிட்டங்கிகளில், ஈடுபட்டனர், ஏக்கர், போலவே, டாக்டர், தமிழர்களுக்காக, பொது, living, countries, tamilnadu, persons, tamil, tamils, myanmar, information, அமைப்புகள், அறிஞர், ஆண்டு, இளைஞர், பாரதியார், திராவிட, கலாச்சாரக், நூற்றாண்டு