இந்தோனேசியாவில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழ் மொழி
பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள இந்தோனேசிய மொழியில் தமிழ் சொற்கள் பலவும், தமிழ் வழிச் சமஸ்கிருதச் சொற்கள் சிலவும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள் திரிந்த சொல் அடைப்புக்குள் தரப்படுகிறது : கவி (தோழன்), காப்பாளர் (காவலர்), செட்டி (விற்பவன்), தம்பி (இளைஞர், தவறு செய்யும் பையன்), திசாந்து (அபினி), பணம் (துணை), மதிப்பு (நிலை).
தமிழின் மூலம் இந்தோனேசிய மொழியில் நுழைந்த வட சொற்கள் உள்ளன.
தமிழ்வழி சமஸ்கிருத சொற்கள் இந்தோனேசியச் சொற்கள்
1. கஜம் கஜா
2. கொலா(சர்க்கரை) குலா
3. தேவதா(பெண்தெய்வம்) தேவதா
4. நாகம் நாகா
5. பீஜம் (விதை) பிஜி
6. புத்ரி புத்திரி
7. மந்திரி மந்திரி
8. மோக்ஷ‘ மோட்சா
9. ராஜா ராஜா
10. விஷம் விஷா.
அப்பம், இடம், கஞ்சி, கட்டில், கடமை, கலம், காட்டு, காவல், கூண்டு, கூலி, சுக்கு, பண்டம், பண்டிதர், மணி, மாமா, மாமி, முகம், முத்து, வட்டில் போன்ற தனித் தமிழ்ச் சொற்கள் பண்டைய சாவகக் கவிதையில் ஆளப்பட்டுள்ளன. இவையல்லாமல் கப்பல், குதிரை, கூடை, தாலி, பிட்டு, பெட்டி எனும் சொற்களும் காணப்படுகின்றன. இது தவிர இத்தோனேசியாவில் இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு எனும் சொற்களும் வழங்கி வருகின்றன. கோயில் என்பது இந்தோனேசிய மொழியில் கூயில் என மருவி
வழங்குகிறது. போகர் தமிழ் நாட்டின் பழங்கால மூலிகை வைத்தியர். இவர் பெயரால் சாவகத்தில் போகர் (Bogor) எனும் ஊர் உள்ளது.
இந்தோனேசியத் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுகின்றனர். அது கொச்சை தமிழாக உள்ளது. தமிழை எழுதத் தெரியாவிட்டாலும் பேசுவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குத் தமிழைப் பயில்வதற்குப் போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மேடானில் உள்ள கோயில்கள் எல்லாம் மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. மேடான் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் கோயில்களில் எட்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களும் பிறகலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலுள்ள மத்தியப் பல்கலைக் கழகமான இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியர் பதவி ஒன்றுள்ளது. அந்தப் பதவியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் செ.வை. சண்முகம் அவர்கள் இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி தமிழ் கற்பித்தார். பல தமிழ் நூல்களும் தமிழ் பற்றிய ஆங்கில நூல்களும் இப்பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ளன. இந்தோனேசியாவில் தமிழ் அச்சகமோ பதிப்பகமோ இல்லை.
உடை/உணவு/திருமணம் :
தமிழர்கள் தங்கள் உணவு உடை முதலிய பழக்க வழக்கங்களில் பெரும்பாலும் இந்தோனேசியர் களையே பின்பற்றுகின்றனர். சேலை கட்டிய தமிழ்ப் பெண்களை இவர்களிடையே காண்பது அரிது. விழாக்களின் போதும் திருமணங்களில் போதும் இவர்களில் 50 சதவீதத்தினர் வேட்டி, புடவைக் கட்டிக் கொள்கின்றனர். பொதுவாக தமிழ்ப் பெண்மணிகள் அணியும் ஆடை கவுன் (Gown) ஆகும். ஆகையால் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களான புடவை, நகைகள் முதலானவை முக்கியமான நிகழ்ச்சிகளின் போதுதான் அணியப்படுகின்றன. மேலும் இந்தோனேசிய சுதந்திரத்தின் போது சாதிப் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை என இத்தமிழர்கள் தீர்மானம் எடுத்துச் செயல்படுத்தினர். žர்திருத்த திருமண முறையையே இவர்கள் விரும்புகின்றனர். தமிழ்த் திருமண முறையும் உண்டு.
தகவல்-தொடர்புச் சாதனங்கள் :
போருக்கு முந்திய காலத்திலும், அதற்குப் பிந்திய காலத்திலும் செயற்பட்ட சங்கங்கள் (1) திராவிட இந்து சபை (2) டெல்லி இந்து சபை (3) கிருஷ்ண சபை (4) தமிழ்ச் சிறார்களுக்கென நடத்திய இந்தியன் பாய்ஸ் ஸ்கௌட் (சாரணியர் சங்கம்) (5) இந்தோனேசிய இந்து இளையர் சங்கம் (6) வட சுமத்திரா பரோபகாரச் சங்கம். இன்று சிறப்பாக இயங்கும் மாதர் சங்கங்களில் பாசுந்தனன் மாதர் சங்கம் குறிப்பிடத்தக்கது. மாதர் சங்கங்கள் செவ்வாய், வெள்ளி தோறும் கூடுகின்றன.
ஜகார்த்தா தமிழர்கள் 'தரும ஏக்சுனா' எனும் புதிய தரும ஸ்தாபனத்தை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியா தமிழர் பிரதிநிதித்துவ சங்க தேசியப் பேரவை என்ற சங்கமும் 1978 இல் அமைக்கப்பட்டது. பொதுவாக இவை தமிழர்களின் கல்வி, சமூகத்துறை, மகளிர் உபகாரச் சம்பளம், அநாதை உதவி முதலிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மலேசியத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிடப்படும் தமிழ், இந்தித் திரைப்படங்களை இந்தோனேசியத் தமிழர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சிங்கப்பூர் வானொலியும் மலேசிய வானொலியும் தொலைக்காட்சியும் இந்தோனேசியத் தமிழர்களின் தமிழுணர்வை வளர்க்க உதவுகின்றன. இந்தோனேசியத் தமிழர்களின் இல்லங்களில் தினந்தோறும் தமிழ்த் திரைபடங்களின் ஒலிச் சித்திரத்தைக் கேட்கலாம்.
தமிழர் சாதனை :
அரசியலிலிருந்து தமிழர்கள் ஒதுங்கி வாழ்ந்தனர். ஆயினும் அதிபர் சுகர்ணோ ஆட்சியின் போது பெரியசாமி கிருஷ்ணா என்ற தமிழர், தமிழர் அல்லாதார் ஆதரவுடன் வட சுமத்திரா மாநில மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொகுப்பு : ஜெ. சாந்தாராம்
கட்டுரைக்கு உதவிய நூல்கள் :
1. அயல்நாடுகளில் தமிழர் -முனைவர் எஸ். நாகராஜன் (1989)
2. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு -டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. இந்தோனேசியப் பயணக்கதை -VIII-மணியன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தோனேசியாவில் தமிழர்கள் - Tamils in Indonesia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர்கள், தமிழர், சொற்கள், இந்தோனேசியாவில், இந்தோனேசிய, தமிழர்களின், எனும், இந்தோனேசியத், தமிழ்ப், தமிழ்ச், வாழும், சங்கம், நாடுகள், தமிழ்நாட்டுத், மாதர், மொழியில், இடம், தகவல்கள், இந்து, பல்கலைக், தரும, பொதுவாக, போதும், நூல்களும், டாக்டர், முதலிய, உணவு, போது, இந்தோனேசியப், | , சங்கங்கள், வானொலியும், காலத்திலும், மேலும், திருமண, தமிழ்த், சுமத்திரா, வருகின்றன, countries, tamilnadu, information, தேவதா, living, persons, tamils, indonesia, tamil, மந்திரி, ராஜா, உள்ளது, தமிழை, இல்லை, போகர், சொற்களும், கலம், பண்டம், வட்டில், தங்கள்