ஆஸ்திரேலியாவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
அமைப்புக்கள் :
1. டார்வின் தமிழ்க் கழகம் - டார்வின்
2. மேற்கு ஆஸ்திரேலியத் தமிழ்க் கழகம் - பெர்த்
3. தென் ஆஸ்திரேலிய இலங்கை அகதிகள் கழகம் - அடிலயிட்
4. மெல்போன் இலங்கைத் தமிழ்ச் சங்கம் - மெல்போன்
5. கான்பெராத் தமிழ்க் கழகம் - கான்பெரா
6. ஈழத்தமிழர் கழகம் - சிட்னி
7. நியூக்காசில் தமிழ்க் கழகம் - நியூகாசில்
8. குவின்ஸ்லாந்துத் தமிழ்க் கழகம் - பிரிஸ்பென்
9. வட குவின்ஸ்லாந்துத் தமிழ்க் கழகம் - (வடமக்கி)
இவை பார்புவா - நியுகினி, நியுசிலாந்து பீஜி ஆகிய நாடுகளிலுள்ள தமிழ்க் கழகங்களுடன் இணைந்து தென்துருவத் தமிழ்க் கழகங்களின் கூட்டமைப்பு (Austra Federation of Tamil Association) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. இது தவிர தொண்ணூறுகளுக்குப் பிறகு, நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் இருப்பதாக 'கலப்பை' ஏட்டின் மஞ்சள் கையேடு (Yellow Guide 1998) தெரிவிக்கிறது. இந்த அமைப்புகள் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தீர்வுக்காக முயற்சி செய்கின்றன. அன்றாட பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு சொல்கின்றன-செய்கின்றன. தமிழ் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :
ஆஸ்திரேலியாவிற்கு வந்த தமிழர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் ஆவர். முதல்கட்டத்தில் வந்தவர்கள் அனைவரும் கல்லூரி, மருத்துவமனைகள், பொறியியல் அலுவலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டனர். முதல் கட்டம் சென்ற தமிழர்கள் வருமாறு:
1. பேரா. கிறிஸ்தி ஜெயரத்தினம்
2. பேரா. சின்னப்பா அரசரத்தினம்
3. டாக்டர். வேலுப்பிள்ளை இராசநாயகம்
4. டாக்டர். கேதீஸ்வரன் துரைசிங்கம்
5. பொறியாளர். எஸ்.ஈ.ஆர். செல்வானந்தம்
6. சம்பந்தநாதர் திருலோகநாதன்-கணிப்புத்துறை
7. ஜெயக்கொடி திருக்குமார் - கணிப்புத்துறை
8. ஜெயக்கொடி சிவன்பாதகுமார் - கடற்தொழில்
9. இராஜேஸ்வரா - கணக்காளர்
10. முத்துகுமாரு கிருஷ்ணகுமார்
11. கந்தசாமி சம்பந்தர்
12. எஸ். நடேசன் - பொறியாளர்
13. டி.கே. மேதர் - வங்கி முகாமையாளர்
14. கணேசமூர்த்தி தெய்வேந்திரராஜா - கணக்காளர்
15. ராஜா முத்தையா தர்மராஜன் - கணிப்புத்துறை
16. நாகலிங்கம் கணபதிப்பிள்ளை - பொறியாளர்
17. எட்வர்ட் குணசிங்கம் - கணக்காளர்
18. பொறியாளர் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்
19. கார்த்திகேசு இரத்தினகுமார் - கணக்காளர்
20. லட்சுமணன் சிவராமன் - கணக்காளர்
21. அண்ணாசாமி ஐயர் பரமேஸ்வரன் - கணக்காளர்
22. கே. கைலைநாதன் - பொறியாளர்.
போன்றோரைப் போல பல நூறு தமிழர்கள் உயர்ந்த பதவியிடங்களில் இருக்கின்றனர். 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு அகதிகளாகக் குடியேறியத் தமிழரில் பலர் முழுக்கல்வியைப் பெறாதவர்கள். அதனால் சமூகத்தில் பல்வேறுபட்ட சிறு தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தின் தினப்படி தேவைகளை நிறைவு செய்யும் மளிகைக்கடை, உணவகம், பொழுது போக்கு சாதனங்களை விற்போர் என சமூகத்தின் பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர். அகதிகளுக்கு 'டோல்' என்னும் உதவித் தொகை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் வேலை பெற்றவுடன் அரசே வீடு கட்டுவதற்கும், நிதி உதவி செய்கிறது. மொத்தத்தில் தாய் நாட்டை விட ஆஸ்திரேலியாவில் தமிழரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே காணப்படுகிறது.
- ப. திருநாவுக்கரசு.
ஆதாரமான நூல்கள் :
1. மஞ்சள் கையேடு 1998 - கலப்பை வெளியீடு.
2. பாரெல்லாம் பரந்த தமிழர் - இந்திர பாலா
3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆஸ்திரேலியாவில் தமிழர் - Tamils in Australia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தமிழ்க், கழகம், கணக்காளர், பொறியாளர், ஆஸ்திரேலியாவில், நாடுகள், வாழும், தமிழர்கள், தமிழ், கணிப்புத்துறை, தகவல்கள், தமிழ்நாட்டுத், tamil, அலுவலகங்களிலும், சமூகத்தின், அனைவரும், | , பேரா, செய்து, செய்கின்றன, டாக்டர், கணபதிப்பிள்ளை, ஜெயக்கொடி, மெல்போன், living, countries, persons, australia, tamils, tamilnadu, information, பிறகு, மஞ்சள், குவின்ஸ்லாந்துத், டார்வின், அமைப்புக்கள், கையேடு