அந்தமானில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இருப்பிடம்
பர்மாவில் உள்ள அராகன் மலையில் இருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவுவரை நீண்ட நெடிய மலைத்தொடரின் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகும். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள் இன்றும் உள்ளன. இந்தியாவின் தென்கோடி முனை குமரியல்ல; இந்தியாவிற்குத் தூரக் கிழக்கில், நிக்கோபார்த் தீவுக்கும் தெற்கே உள்ளது. இப்பகுதி நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளது. இதன் பெயர் பிக்மலியன் பாயின்ட் இது அண்மையில் 'இந்திரா முனை' என நடுவணரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர், சென்னையிலிருந்து 1191 கடல் மைல் தூரத்திலும், கல்கத்தாவிலிருந்து 1255 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றது. 1945 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அந்தமான் முதலிய தீவுகள் 1-11-1956 முதல் நடுவணரசின் நேரடி மாநிலமாயின.
தமிழர் குடியேறிய வரலாறு
தீவுமக்களும் தமிழரும் :
அந்தமான் தீவில் ஆப்ரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். இம்மக்கள் 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர், பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் பொருள், மொழியின் வேர்ச்சொல் ஆகியவை தமிழோடு ஒத்துப் போகின்றன. இவர்களைப் போலவே நிகோபார் தீவுகளில் மங்கோலியன் கலப்பு இன மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிகோபாரிகள் வாழ்கின்றனர். நிகோபாரி மொழியில் தமிழைப் போல் 'ழ' கரம் பயன்படுத்தப்
படுவதோடு, குடுமி வளர்த்தல் மற்றும் மங்கோலியரோடு ஒத்துப் போகாத தமிழரோடு இணைந்த குடும்ப வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் உண்டு.
பெரிய நிகோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து என்னால் வேறு படுத்திக் காண முடியாது"
என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந்தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.
'அந்தமான்' என்ற பெயரே தமிழர் கொடுத்ததுதான். மான்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயரால் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இருந்ததாம். இதற்கான ஆதாரத்தை தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இன்றும் காணலாம். நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்தபெயர் : 'நக்கவரம்' என்பது. அக்காலத்தில் அத்தீவில் இருந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.
கார் நிகோபாரை 'கார்தீவிபா' என்றும் கிரேட் நிகோபாரை 'நாகதீவிபா' என்றும் சோழர்கால சமஸ்கிருத கல்வெட்டு கூறுகிறது. மார்கோபோலோ வரவால் இத்தீவின் பெயர் 'நெக்குவரம்' என்று மாறிவிட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யில் வரும் சாதுவன் என்ற வணிகன் இத்தீவில் தான் மாட்டிக்கொண்டான் என்கின்றனர். 'நக்க சாரணர் நாகர்வாழ்மலை' என்று குறிப்பிடும் பகுதி இஃதே எனச் சொல்லலாம்.
இரண்டாம் கட்ட குடியேற்றம் :
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தீவின் முக்கியத்துவத்தை உணர்ந்து படைகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் அரசியல் கைதிகளை வாழ்நாள் தண்டணை தந்து இங்கு குடியேற்றினர்.
சிறைச்சாலைக் கட்ட சென்னையிலிருந்து பல தமிழர் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர்.
அரசியல் கைதிக்கு அடுத்து, வணிகர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தின்
போது போராடிய 1400 மலையாளிகளும் பெருமளவில் குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1971-ஆம் ஆண்டு மொழிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம், தமிழர் இரண்டாம் இடம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
567 தீவுக் கூட்டத்தில் இதுவரை மக்கள் குடியேறியிருப்பவை 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகளே ஆகும். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 1945 வரை மூன்றாண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் இத்தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் விட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் ஏற்றப்பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் என்ற தமிழர் ஆவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்தமானில் தமிழர் - Tamils in Andaman - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், வாழும், மக்கள், அரசியல், அந்தமானில், பெயர், நாடுகள், தீவுகள், தமிழர்கள், வாழ்கின்றனர், இருந்து, அந்தமான், தகவல்கள், தமிழ்நாட்டுத், குடியேறினர், என்பது, பெருமளவில், சாம்பன்&, | , ஒத்துப், என்கின்றனர், andaman, என்றும், கட்ட, பின்னர், இரண்டாம், பழக்க, tamils, இத்தீவின், நிகோபாரை, மைல், information, உள்ள, இன்றைய, tamilnadu, countries, persons, living, ஆகும், இன்றும், tamil, தூரத்திலும், கடல், சென்னையிலிருந்து, இந்தியாவின், உள்ளது, வரலாறு