தமிழ் எழுத்து முறை - தமிழ்க் கட்டுரைகள்
தமிழ் எழுத்து முறையானது ஒலிப்பியல் அடிப்படையிலானது. குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்து முறை தமிழ்ப் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். இந்த தமிழ்ப் பிராமிதான் காலப்போக்கில் வட்டெழுத்தாகவும் உருமாறியது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப வசதியாக 6 நூற்றாண்டிலிருந்து 10 நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
எழுத்துக்களின் வகைகள்
- உயிர் எழுத்துக்கள்
- மெய் எழுத்துக்கள்
- எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)
எழுத்துக்களின் விரிபு
ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.
எழுத்துக்களின் பெருகல்
உயிர்மெய் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
இதில்,
அ, இ, உ, எ, ஒ - ஆகியவை குறில். ஆங்கிலமும் இதே 5 எழுத்துக்களையே உயிரெழுத்தாகக் கொண்டது.(A, E, I, O, U)
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ - ஆகியவை நெடில்.
ஐ, ஔ - ஆகியவை கூட்டெழுத்துக்கள் (அய், அவ்), இவைகள் அடிக்கடிப் பயன்படும் காரணத்தால் தனி எழுத்துக்களாக உருவாக்கப்பட்டன..
மெய் எழுத்துக்கள்
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
எழுத்தோரன்ன குறியீடுகள்
ஆய்தம் - ஆய்த எழுத்து
ஃ |
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஆய்தம் உயிரின் தன்மைகளையும், மெய்யின் தன்மைகளையும் தேவையெனின் ஏற்க வல்லது.
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
ஆய்தம் விசர்க (visarga) எனும் வடமொழி இலக்கணத்தில் இருந்து வேறுபட்டது.
ஒலியம் "F" பிறப்பிடம் "வ்" கொண்டது. தவறாக சிலர் ஒலியம் "F" பிறப்பிடம் "ப்" கொண்டது என்றும், மேலும் மிக மிக தவறாக ஆய்தம் பாவிக்கக் கூடாத இடத்தில் ஆய்தத்தைப் பாவித்து "F=ஃப்" எனும் வழமையை ஓரளவிற்க்கு நிலைநாட்டி விட்டனர். எனவே தவறெனினும் ஃப்=F என்று சமகால பாவனையில் உண்டு. அத்துடன் F=வ், F=ஃவ், F=ஃப் எனும் மூன்று வேறுபட்ட சமகால பாவனைகள் காணப்படுகின்றன.
ஆய்தம் ஓர் சொல்லின் முதல் எழுத்தாக வரும். உ+ம்: ஃகான்
(எனவே ஆய்தம் உயிர் எழுத்துக்களுடனும் மெயெழுத்துக்களுடனும் சேரவல்லது என்பதும் உறுதி.)
(எனவே சில பாவனைகளில் ஆய்தம் அகரமெய்யுடன் சேர்ந்து வருகின்றதா அல்லது மெய்யுடன் சேர்ந்து வருகின்றதா எனும் ஊகம் வரூஉம் இடத்தைக்கொண்டு நிர்ணயிக்கப்படவேண்டும்.)
ஆய்தம் ஓர் சொல்லின் முற்று எழுத்தாக வரும், உ+ம்: முப்பஃ ¸கியசஃ, போந்துகஃ
ஆய்தம் ஓர் சொல்லின் இடையிலே ஓர் எழுத்தாக வரும், உ+ம்: அஃறிணை, மிஃதே, சஃது
ஆய்தம் ஈர் எழுத்தாக நீட்ட இசைவது. உ+ம்: க்ஃ, க்ஃஃ, ஃக், ஃஃக், அஃ, ஃஇ, அஃஃ, ஃஃஇ. [ஆயுதத்திற்கு முப்பாற் புள்ளி என்ற பெயரும் உண்டு. தவிரத் தனிநிலை, புள்ளி, நலிபு என்றும் ஆய்தத்தை அழைத்திருக்கிறார்கள்.]
உயிர் + மெய் எழுத்துக்களின் இணைவு அட்டவணை
+ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ |
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் எழுத்து முறை - Tamil Letter System - தமிழ்க் கட்டுரைகள் - Tamil Articles - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஆய்தம், எழுத்து, தமிழ், எழுத்துக்கள், முறை, உயிர்மெய், உயிர், வரும், கட்டுரைகள், எழுத்தாக, tamil, எழுத்துக்களின், தமிழ்க், எனும், ஆகியவை, வல்லின, சொல்லின், உண்டு, புள்ளி, கொண்டது, குறில், மெய், தமிழ்நாட்டுத், என்றும், தகவல்கள், பிறப்பிடம், ஒலியம், articles, தன்மைகளையும், தவறாக, சமகால, வருகின்றதா, | , சேர்ந்து, letter, system, tamilnadu, தனிநிலை, குறியீடுகள், சமஸ்கிருத, எழுத்தோரன்ன, கிரந்த, பின்னர், குற்றியல், ஆகும், மூன்று, information, ஆய்த, தமிழ்ப், இருந்து, சீர்திருத்தம்