பதிற்றுப்பத்து - சங்க காலம்
பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப்
பத்துச் செய்யுள் வீதம்
பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது.
இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை
80
செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார்
எனத் தெரியவில்லை.
இதற்குப் பழைய உரையொன்று உண்டு.
இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.
இந்நூலிற் காணும் பத்துக்களை இயற்றியோர் பெயரும், பாடல் பெற்ற மன்னர் பெயரும் பின்வரும் அட்டவணை வழி அறிக.
பத்தின் பெயர் | பாட்டுடைத் தலைவன் | பாடிய புலவர் |
முதற் பத்து |
- |
- |
இரண்டாம் பத்து | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் |
குமட்டூர்க் கண்ணனார் |
மூன்றாம் பத்து | பல்யானைச் செல்கெழுகுட்டுவன் |
பாலைக் கௌதமனார் |
நான்காம் பத்து | களங்காய்க் கண்ணிநார்முடிச்சேரல் |
காப்பியாற்றுக் காப்பியனார் |
ஐந்தாம் பத்து | கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் |
பரணர் |
ஆறாம் பத்து | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | காக்கை பாடினியார் நச்செள்ளையார் |
ஏழாம் பத்து | செல்வக் கடுங்கோ வாழியாதன் |
கபிலர் |
எட்டாம் பத்து | தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை |
அரிசில் கிழார் |
ஒன்பதாம் பத்து | இளஞ்சேரல் இரும்பொறை | பெருங்குன்றூர் கிழார் |
பத்தாம் பத்து |
- |
- |
இந்நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுட்கும், அதிலுள்ள ஒரு அழகிய தொடரால் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அருவியாம்பல், தசும்பு துளங்கு இருக்கை, பிறழ நோக்கு இயவர் என்பன அவற்றுள் சில.
ஒவ்வொரு பாட்டுக்கும் திணை, துறை, வண்ணம், தூக்கு என்பன காணப்படுகின்றன. இவை இசையுடன் பாடப்பட்டன போலும். இதன் நான்காம்பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேர வேந்தர்களின் வீரமும் கொடையும், அவர்தம் தேவியரின் அழகும், சிறப்பும், கற்பு மேம்பாடும் இப்பாடல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
பந்தர், கொடுமணம் என்ற இரண்டு ஊர்களின் செல்வ வளமும் இவ்விடங்களில் சேரரின் பண்டக சாலைகள் இருந்தமையும் அறியத் தக்கன. அண்மையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் இப்பகுதிகளின் பண்டைப் பெருமையைக் காட்டவல்லன.
நன்மக்கள் வேண்டி வேள்வி செய்தல் உண்டு என்பதனை இந்நூலால் அறிகின்றோம். அந்தணரின் ஆறு கடமைகள் இன்னின்னவென்று ஒரு செய்யுள் (24) கூறுகின்றது. அறநெறிப்படி ஆளப்படும் அரசுக்குத் தடையாக அமைவன இன்னவை என இந்நூல் கூறுகின்றது. அதனைக் காண்க:-
சினனே காமம் கழிகண்ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும் (22) |
(சினன் = கடுங்கோபம்; கழிகண்ணோட்டம் = அளவுக்கு
விஞ்சிய அருள்; தெறல் கடுமை = மிகக் கடுமையாகத்
தண்டித்தல்; திகிரி = சக்கரம்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - Patirruppattu - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பத்து, காலம், பதிற்றுப்பத்து, ஒவ்வொரு, சங்க, புலவர், தகவல்கள், பாடிய, தமிழ்நாட்டுத், இலக்கிய, உண்டு, நூல்கள், தமிழ், பெயரும், பெற்ற, என்பன, தெறல், | , கழிகண்ணோட்டம், கூறுகின்றது, கிழார், இரும்பொறை, பத்துச், tamil, period, sangam, patirruppattu, literatures, list, செய்யுள், information, tamilnadu, இதன்