முல்லைப்பாட்டு - சங்க காலம்
பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.
இப்பாட்டில், தலைவன் பிரிந்துபோய்ப் பாசறையில் இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம் வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள். அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர், தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித் தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான். இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக் கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.
இப்பாட்டில், தமிழர்களின் பாசறை அமைப்பும், அதில் மகளிர் கச்சணிந்தும், வாள் ஏந்தியும் நின்று பணியாற்றல், கவசம் பூண்ட யவன வீரர்கள் காவல் புரிவது, பாவை விளக்கு எரிதல், கன்னல் என்னும் கருவியால் நாழிகை கணக்கிடுதல் முதலிய செய்திகள் அழகுறக் கூறப்பட்டுள்ளன.
அரசன் வெற்றியோடு திரும்பி வரும் முல்லை நிலத்தில் பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பி நிற்றலை, நப்பூதனார் பாடும் அழகே அழகு!
தேடல் தொடர்பான தகவல்கள்:
முல்லைப்பாட்டு - Mullaipattu - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - முல்லைப்பாட்டு, சங்க, காலம், தலைவன், நூல்கள், தமிழ்நாட்டுத், இலக்கிய, தகவல்கள், தமிழ், இப்பாட்டில், வரும், mullaipattu, அரண்மனையில், வெற்றியோடு, | , முதலிய, திரும்பி, முல்லை, நப்பூதனார், list, literatures, tamil, period, sangam, இதனை, information, tamilnadu, இதற்கு