மலைபடுகடாம் - சங்க காலம்
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால் விளக்கப்படுகின்றன. ஆகுளி, பாண்டில், கோடு, களிற்றுயிர்த் தூம்பு, குறுந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை என்பன பிற கருவிகள்.
மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின் சிறந்த பகுதிகள்.
நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரும் உண்ட உணவுகள் பற்றியும், மலைவழியில் போவார் எதிர்கொள்ளும் இடையூறுகளும் கூறப்பட்டுள்ளன.
நன்னன் மலையான நவிரத்தில் தோன்றும் சேயாற்றின் தன்மையும், அங்குக் குடிகொண்ட காரி உண்டிக் கடவுளும் (சிவபெருமான்) பற்றிய செய்தியும் இதில் காணப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - Malaipadukadam - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மலைபடுகடாம், நன்னன், காலம், சங்க, கூறப்பட்டுள்ளன, தகவல்கள், நூல்கள், பற்றிய, தமிழ்நாட்டுத், இலக்கிய, தமிழ், sangam, பல்வேறு, வருணனையும், சிறப்பும், | , தோன்றும், malaipadukadam, period, list, literatures, tamilnadu, information, tamil, இதில்