கலித்தொகை - சங்க காலம்
பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.
பாலை | - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
குறிஞ்சி | - கபிலர் |
மருதம் | - மருதன் இளநாகனார் |
முல்லை | - சோழன் நல்லுருத்திரன் |
நெய்தல் | - நல்லந்துவனார் |
அம்மூவனாரே இந்நூலைத் தொகுத்தார் என்பர். நூல்
முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற
கருத்தும் உண்டு.
காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது
கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன;
ஓசை இனிமை
மிக்கது; எண்ணங்கள் மிக உயர்ந்தன.
இளமை நிலையில்லாதது என்று கூறி, அது உள்ள போதே
காதலின்பத்தை முழுமையாகத் துய்க்க வேண்டும் என்பார் ஒரு
புலவர். மிகக் கொடிய வறுமையால் வாடினாலும் ஒன்றினார்
வாழ்க்கையே
வாழ்க்கை என்கின்றார். அவர், மேலும்,
ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை ! (18) |
(ஒரோஒகை = ஒரு கை ; ஒன்றன் கூறு ஆடை = ஆடையின்
ஒரு பகுதி; ஒன்றினார் = சேர்ந்து
இருப்பவர்)
காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய
இன்பம் இல்லை என்கிறாள்
ஒரு தலைவி.
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு? (6) |
(அன்பற = அன்பு நீங்க; சூழாதே = கருதாமல்; ஆற்றிடை
=வழியில்; நாடின் = சிந்தித்தால்)
மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப்
பற்றி
எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப்
பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா?
என்பது பொருள்.
கலித்தொகையில் மதுரையும், வையையும் மீண்டும்
மீண்டும்
புகழப்படுகின்றன. பாண்டியனும்
பல பாடல்களில்
புகழப்படுகிறான். இதில் இராமாயணக் கதை நிகழ்வுகளும், பாரதக்
கதை நிகழ்வுகளும் உவமைகளாக ஆளப்பட்டுள்ளன. ஆயர்கள்
ஏறுதழுவிப் பெண்ணை மணத்தல் இந்நூலில் மட்டுமே
காணப்படுகிறது. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் பற்றிய
குறிப்புகள் இந்நூலில் மட்டுமே காணப்படுகின்றன.
கலித்தொகை - Kalittokai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கலித்தொகை, சங்க, காலம், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஒரோஒகை, ஒன்றினார், நூல்கள், பாடிய, தமிழ், இலக்கிய, ஆற்றிடை, நாடின், சூழாதே, ஒன்றன், வழியில், இன்பம், நிகழ்வுகளும், | , மட்டுமே, இந்நூலில், kalittokai, மீண்டும், வாழ்க்கையே, information, என்பது, tamilnadu, list, literatures, period, அவர், tamil, sangam, வேண்டும், பாலை, வாழ்க்கை