ஐந்திணை ஐம்பது - ஆறாம் நூற்றாண்டு
ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது வெண்பாக்களைக் கொண்ட நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன. கருத்து வளமும் நடை வளமும் கொண்டது
இந்நூல்.
இதனை இயற்றியவர் மாறன் பொறையனார். மாறன் என்பது இவருடைய தந்தையார் பெயராதல் கூடும். எனவே பொறையனார் என்பது இவர் இயற்பெயர் எனலாம்.
இந்நூலின் முதற் செய்யுளிலேயே திருமால், முருகவேள், சிவபெருமான் என்னும் மூன்று கடவுளரின் திருப்பெயர்களும் இடம் பெறச் செய்தமையின் இவருடைய சமயம் வைதீகம் என்பது தெரிகின்றது.
இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஒன்று உள்ளது. இதற்குப் பழைய உரையொன்று கிடைத்துள்ளது. இதன் செய்யுட்களைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.
தலைவனால் தனியே விடப்பட்ட பெண்ணொருத்தி, தன் காம மிகுதியால் வாடுகின்றாள். தன் தலைவன் ஊர்ந்து சென்ற தேரின் சுவட்டைக் கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகின்றாள். எனவே, அங்கும் இங்கும் ஊர்ந்து மகிழும் நண்டினை அழைத்து, வளைந்த காலையுடைய நண்டே! உன்னை யான் ஒன்று வேண்டுகின்றேன். என்றும் ஒடுங்காத ஆரவாரமுடைய கடற்கரை நாட்டின் தலைவனாகிய என் காதலன் ஏறிச் சென்ற தேர் விட்டுச் சென்ற சுவட்டினை யான் கண்ணாரக் காணும்படியாக, அதனை நின் நடையாலே சிதைத்து விடாதே! என்று வேண்டுகின்றாள் (42). இது போன்ற பாடல்களைக் கொண்ட இந்நூல் அகஉணர்வுகளை அழகுபடச் சித்திரிக்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை ஐம்பது - Aintinai Aimpatu - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஐம்பது, ஐந்திணை, நூற்றாண்டு, ஆறாம், தமிழ்நாட்டுத், என்பது, சென்ற, நூல்கள், தகவல்கள், தமிழ், இலக்கிய, இவருடைய, பொறையனார், aimpatu, ஒன்று, ஊர்ந்து, | , யான், aintinai, மாறன், வளமும், list, literatures, tamil, century, tamilnadu, கொண்ட, information, இந்நூல்