விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில்:
சேற்றுர் குறுநில மன்னர்களுக்கும் சொந்தமான இக்கோவில் தேவதானத்திற்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் தனித்துக் கட்டப் பட்டிருக்கிறது. பாண்டியனைக் கொல்ல சோழன் அனுப்பிய நச்சு கலந்த ஆடையின் மூலமாக நேரவிருந்த தீங்கை இவ்விறைவன் தவிர்த்தளியதால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். கோவிலருகே நாயக்கர் காலத்து மண்டமும், அரண்மனை மண்டமும் தேவர்கள் மண்டபமும், எதிரில் தெப்பக்குளமும் உள்ளன. வைகாசியில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
மகாலிங்கம் கோவில் |
இது சதுரகிரி மலையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. இவ்விறைவனின் மதுரை வாழ் செளராஷ்டிரர்களின் குலதெய்வம் ஆகும். இக்கோவிலுக்கு 3 கி.மீ தூரத்தில் சந்தன மகாலிங்கம் குகைக்கோவில் உள்ளது. தாணிப் பாறையில் அஷ்டலட்சுமி ஆசிரமம் உள்ளது.
வேங்கடாசலபதி கோவில் :
திருவில்லிப்புத்தூர் வட்டத்துள் திருவண்ணாமலை என்னும் தலத்தில வேங்கடாசலபதி கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் கோனேரி எனும் அழகிய குளம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. உலகிலேயே பெரிய விநாயகர் திருவுரு இதுவே.
நாச்சியார் கோவில் :
நாச்சியார் கோவில் |
வைத்தியநாத சுவாமி கோவில் :
திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், உள்ளது, விருதுநகர், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், இக்கோவில், மகாலிங்கம், தகவல்கள், இங்குள்ள, தமிழ்நாட்டுத், திருப்பணி, திருமலைநாயக்கரால், சிற்பங்கள், விழாவும், இக்கோவிலில், | , மடவார், நாச்சியார், எனப்படும், திருப்பாவை, வேங்கடாசலபதி, இப்பெயர், சுவாமி, information, districts, மண்டமும், virudhunagar, புரட்டாசி, இருக்கிறது, அழகிய, விநாயகர்