விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | விருதுநகர் |
பரப்பு : | 4,241 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,942,288 (2011) |
எழுத்தறிவு : | 1,398,788 (80.15 %) |
ஆண்கள் : | 967,709 |
பெண்கள் : | 974,579 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 458 |
வரலாறு :
விருதுநகர் மாவட்டம் பல காலம் இராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. எனவே இராமநாதபுர மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் யாவும் விருதுநகர் மாவட்டத்திற்கும் பொருந்துபவனவாகும் (காண்க : இராமநாதபுர மாவட்டம்)
எல்லைகள் :
வடக்கில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களையும், கிழக்கில் இராமநாதபுர மாவட்டத்தையும், தெற்கில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களையும், மேற்கில் கேரளா மாநிலத்தையும் விருதுநகர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-2 (அரும்புக்கோட்டை, சிவகாசி); வட்டங்கள்-7 (திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி); வருவாய் கிராமங்கள்-608.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சிகள்-6, ஊராட்சி ஒன்றியங்கள்-11, பஞ்சாயத்துக்கள்-464, குக்கிராமங்கள்-1,447.
சட்டசபைத் தொகுதிகள் :
சட்டசபைத் தொகுதிகள்-6 (அருப்புக் கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம்).
பாராளுமன்றத் தொகுதி :
சிவகாசி.
கல்வி :
பள்ளிகள் : 1373 (அரசு மற்றும் தனியார்). கல்லூரிகள்-11 (வி.எச்.என்.எஸ். கல்லூரி, விருதுநகர்; வி.வி.வி. பெண்கள் கல்லூரி, விருதுநகர்; எஸ்.பி.கே.கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டை; தேவாங்கர் கலைக் கல்லூரி, அருப்புக்கோட்டை; எஸ்.ஆர். நாயுடு நினைவு கலைக்கல்லூரி, சாத்தூர்; எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, சிவகாசி; அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி; ராஜூஸ் கல்லூரி, இராஜபாளையம், மெப்கோ பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோவில்; ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரி, இராஜபாளையம்); இராஜபாளையத்தில மணிமேகலை மன்றத்தின் ஆதரவில் தெலுங்கு வகுப்புகள் நடைபெறும் தெலுங்கு வித்தியாலயம் அமைக்கப் பட்டுள்ளது. மற்றும் பல்தொழில் கல்வி நிறுவனங்களில் ராஜபாளையத்தில் உள்ள இராமசாமிராஜா பாலிடெக்னிக்கும், விருதுநகரில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கும் குறிப்பிடத்தக்கன.
மழையளவு :
சராசரி-811.7 மி.மீ.
ஆறுகள் :
அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு, மற்றும் கெளசிக ஆறு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விருதுநகர், கல்லூரி, சிவகாசி, tamilnadu, பெண்கள், மாவட்டங்கள், தமிழக, சாத்தூர், அருப்புக்கோட்டை, மாவட்டம், இராமநாதபுர, தகவல்கள், தமிழ்நாட்டுத், | , கல்வி, கலைக்கல்லூரி, உள்ள, பாலிடெக்னிக்கும், இராஜபாளையம், தெலுங்கு, தொகுதிகள், வருவாய், information, districts, virudhunagar, மக்கள், மாவட்டங்களையும், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சட்டசபைத்