தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
கார்னர்டு மணல் :
உப்புத்தாள் செய்யத் தேவைப்படும் இப்பொருள் இம்மாவட்டத்தின் கடலோரங்களின் சில பகுதிகளில் கிடைக்கிறது.
கிராபைட் :
உருக்கு வேலைக்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படக்கூடிய இது பென்சிலில் உள்ள எழுதுபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
மோனசைட் :
உலோக சத்து நிறைந்த இந்தப் பொருளும் கடற்கரை மணலில் காணப்படுகிறது. சில வகை மருந்துகள் தயாரிக்க மிகவும் தேவைப்படக் கூடியது.
சுண்ணாம்புக்கல் :
திருச்செந்தூர் வட்டம், சாத்தான் குளம் பகுதியில் ஒரு வகை உயர்தரச் சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைக்கிறது. இதைப் பளிங்குக் கற்களாக மாற்றினால் கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படக்கூடும்.
நுரைக்கல் :
இந்த வகைச் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தியும் சிமெண்ட் தயாரிக்கலாம். கடற்கரையோரமாய் உள்ள தீவுப் பகுதிகளில் இது மிகுதியாய் உள்ளது.
இல்மனைட் :
ஏராளமான அளவில் சாத்தான் குளத்திலும், கோவில்பட்டி வட்டத்திலும் கிடைக்கிறது. இதில் இரும்பு, டிட்டானியம் ஆக்ஸைடுகள் கலந்து உள்ளன.
பாஸ்டேட் :
மலைக்கல் போன்ற இவ்வகை பாஸ்பேட்டுகள், தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கிறது.
கெட்டிமண் :
கட்டடம் கட்டப்பெரிதும் பயன்படும் இவ்வகைமண்தூத்துக் குடியிலும், அதையடுத்த தீவுகளிலும் மிகுதியாக உள்ளது.
சுற்றுலா தலங்கள் :
தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள்.
வழிபாட்டிடங்கள் :
திருச்செந்தூர் முருகன் கோவில், மணப்பாடு புனித சிலுவை ஆலயம், கழுகுமலை முருகன் கோவில், நவதிருப்பதிகள் (திருவைகுண்டம், பெருங்குளம், வரகுணமங்கை, திருப்புளியங்குடி, தொலைவில்லி, மங்களம், தென் திருப்பேரை, திருக்கழுவூர், ஆழ்வார் திருநகர்).
தூத்துக்குடி :
தூத்துக்குடி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, tamilnadu, மாவட்டங்கள், கிடைக்கிறது, தமிழக, கொண்டது, திருச்செந்தூர், பகுதிகளில், ஆலைகள், தகவல்கள், தமிழ்நாட்டுத், | , முத்து, வாயிலாக, கோவில், முருகன், கோயில், அரைக்கும், நவதிருப்பதிகள், நிலையம், பகுதிகளையும், மேலூர், சாத்தான், தயாரிக்கவும், உள்ள, information, districts, thoothukudi, கடற்கரை, மிகவும், மணப்பாடு, போன்ற, உள்ளது, சுண்ணாம்புக்கல், கழுகுமலை