திருச்சி - தமிழக மாவட்டங்கள்
மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கடை வீதியில் துணிவியாபாரம்,
பாத்திர வியாபாரம், நகை வியாபாரம், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள்,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் முதலியன வணிகச்
செழிப்புக்கு உறுதுணையாக உள்ளன. கூட்டுறவு வளர்ச்சிக்குச் சான்றாக
சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி விளங்குகிறது. மெயின்கார்டு
கேட்டுக்கு அருகில் உள்ள இந்நிறுவனம் நகரத்தின் பல பகுதிகளிலும்
கிளை நிறுவனங்களை நடத்துகிறது. மாரீஸ், ரம்பா, ஊர்வசி, கலையரங்கம்,
மீனா, சோனா என்று திரையரங்குகள் ஏராளமாய் உள்ளன. ஹோட்டல் ராஜாளி,
பெமீனா, ஹோட்டல் ராஜசுகம், குறிஞ்சி, கல்பனா, காஞ்சனா முதலிய
பெரிய உணவு விடுதிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி
அமைக்கப்பட்டுள்ளன. டோல்கேட் அருகில் புகழ்வாய்ந்த டி.வி.எஸ்
நிறுவனம் செயல்படுகிறது. திருச்சி நகராட்சி திருச்சி, ஸ்ரீரங்கம்,
பொன்மலை, கிராப்பட்டி, உறையூர், பாலக்கரை ஆகியப் பகுதிகளைக்
கொண்டுள்ளது. நகராட்சிப் அலுவலகத்திற்கு அருகில் வானொலி நிலையம்
உள்ளது. திருச்சி நகருக்குள் அனைத்து மத்திய மாநில அரசு
அலுவலகங்களும் அமைந்துள்ளன. வெஸ்ட்ரி பள்ளிக்கருகில் தற்போது
மாநில அரசின் பொறுப்பில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை
அமைந்துள்ளது. வசதி நிறைந்த விடுதியாகவும், படபிடிப்புத் தளமாகவும்
இது விளங்குகிறது. இதற்கு மிக அருகில் பெண்கள் விடுதியான
ஒய்.டபிள்யூ.சி.ஏ இருக்கிறது. தினமலர், தினத்தந்தி, மாலைமலர், மாலை
முரசு முதலிய நாளேடுகளும் இங்கு அச்சாகின்றன. திருச்சி நகரத்தில்
மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. நகரின் பல
பகுதிகளிலும் பைக், ஸ்கூட்டர், லாரி முதலிய வாகனங்களைப் பழுதுப்
பார்க்கும் பட்டறைகள் நிறைந்துள்ளன. திருச்சி இரயில் நிலையம்
அழகான, தூய்மையான, பெரிய இரயில் சந்திப்பு நிலையமாக விளங்குகிறது.
1946 இல் மகாத்மா காந்தி திருச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கலைகள்
வளர்ச்சி பெற ரசிக ரஞ்சனி சபா எனும் அமைப்பு செயல்படுகிறது.
திருச்சியில் தொலைக் காட்சி நிலையமும் உள்ளது.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அமைந்துள்ளது.
அங்கிருந்து பயணிகள் சென்னை, திருவனந்தபுரம், கொழும்பு முதலிய
இடங்களுக்குச் செல்கிறார்கள்.
திருவெறும்பூர் :
இது திருச்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள இரயில் தொழிற்சாலையில் ஊர் வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான பாரத் கனரகத் தொழிற்சாலை இங்குள்ளது. மக்கள்தொகை மிகுதி. எறும்பேஸ்வரம் என்னும் பெயரும் இதற்கு வழங்கி வந்தது. மலைமேலுள்ள சிவன் கோவில் ஜைனகலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. போர்கள் நிகழ்ந்த காலத்தில் இவ்வூர் சிறந்த படைத்தளமாக விளங்கிற்று. இவ்வூருக்கு அருகில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மணப்பாறை :
இது குளித்தலைக்கு 22 மைல் கிழக்கில் உள்ளது. மனப்பாறை உழவு மாடுகளுக்குச் சிறந்த ஊராக இன்றளவும் விளங்குகிறது. மனப்பாறை முறுக்குக்கும் பிரசித்திப் பெற்றது. அரசின் பல்வேறு திட்டங்களால் வளர்ந்துள்ளது. இரயில் நிலையம், பேருந்து நிலையம் முதலியன உள்ளன. வாணிகத்திலும், வேளாண்மையிலும் சிறந்திருக்கிறது. புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சமயபுரம் :
சமயபுரம் |
முக்கொம்பூர் :
முக்கொம்பூர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருச்சி, அருகில், உள்ளது, முதலிய, மாவட்டங்கள், விளங்குகிறது, நிலையம், தமிழக, இரயில், tamilnadu, தமிழ்நாட்டுத், மத்திய, தகவல்கள், உள்ள, அமைந்துள்ளது, தொலைவில், திருச்சிக்கு, தொழிற்சாலை, வளர்ச்சி, பயணிகள், மைல், சிறந்த, முக்கொம்பூர், காவிரி, என்றும், | , சமயபுரம், கிழமைகளில், போர்கள், இங்கு, மனப்பாறை, கோவில், மாநில, கூட்டுறவு, பகுதிகளிலும், ஹோட்டல், முதலியன, வங்கிகள், districts, information, வியாபாரம், பெரிய, பேருந்து, அரசின், புதுக்கோட்டை, வசதி, அரசு, tiruchirappalli, சுற்றி, செயல்படுகிறது, இதற்கு