திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டத்தில் நெல்விளையும் பகுதிகளில் நன்னிலம் வட்டம் முக்கியமானது. இங்குள்ள மதுவனீசுவரர் கோயிலில், சிவபெருமானின் விக்கிரகத்துக்குப் பின்னால் தேன்கூடு இருக்கிறது. இக்கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இவ்வூர் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்துக்கு அருகில் உள்ள ஊரின் பெயர்:'மாப்பிள்ளைக் குப்பம்' என்பதாகும்.
மயிலாடுதுறை - அறந்தாங்கி, தஞ்சை திருவாரூர், பேரளம் - காரைக்கால் இரயில் பாதைகள் இவ்வட்டத்தின் வழியே செல்லுகின்றன.
எண்கண்:
புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இவ்வூரும் ஒன்று. கடாரங்கொண்டான்: இவ்வூர் திருவாரூர் - நாகை சாலையிலிருக்கிறது. இங்குள்ள கோயிலுக்கு அழகான மதில் சுவர்கள் உள்ளன. இத்தகைய மதில்களை இந்நாளில் அமைக்க 100 கோடி ரூபாய் கொட்டினாலும் கட்ட முடியாது.
குடவாயில்:
இவ்வூரின் பெயர் இப்போது கொடவாசல் என்று மருவி வழங்கி வருகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குடவாசல் இருக்கிறது. குடம் என்பது மேற்கைக் குறிக்கிறது. குடவாயில் ஒரு நகரின் மேற்குப் பகுதி. இங்கே குடந்தையைத் தலைநகராகக் கொண்ட அரசர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படுகிறது.
'தண்குடவாயில் அன்னோள்' என்று அகநானுறு கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தலையாலங்காடு:
தலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பெருவேளூர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.
திருக்கண்ணபுரம்:
![]() |
திருக்கண்ணபுரம் |
புனையும் குழலான் பரிந்தளித்த
பொங்கலமுதும் பொரிக்கறியும்
அனைய சவரிநாயருக்கே யாமென்று
அருந்தும் ஆதரவின்
முனைய தாயன் பொங்கலென்று
முகந்தற் கோதும் அமுது ஈந்து
வனையும் பெருமை எப்போதும்
வளஞ்சேர் சோழமண்டலமே.
திருக்கண்ணங்குடி:
கீவளூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கிறது. அவ்வுருவம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கி வைத்த நிலையில் அமைந்து தோற்றப்பொலிவு பெற்றது.
இரவில் மூடாத இலைகளையுடைய புளியமரம்; பூத்துக் காய்த்தாலும் விதையை நட்டால் முளைக்காத வகுளமரம்; வேறு எங்கும் நல்லநீர் இல்லாவிட்டாலும் ஓர் இடத்தில் மட்டும் நன்னீர் கிடைக்கும் கிணறு; ஆகியவை இங்கு உள்ளன. இதையொட்டிய பழமொழி இங்கு நிலவுகிறது. 'உறங்காப்புளி ஊறாக்கிணறு, காயாவகுளம், தோரா வழக்கு திருக்கண்ணங்குடி'.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவாரூர், இருக்கிறது, தொலைவில், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இவ்வூர், இங்குள்ள, திருக்கண்ணபுரம், தமிழ்நாட்டுத், தகவல்கள், என்பது, முனியதரையன், இங்கே, திருக்கண்ணங்குடி, | , இங்கு, இக்கோயிலில், திருவாரூரிலிருந்து, information, districts, thiruvarur, நன்னிலம், பெயர், ஒன்று, இரயில், குடவாயில்