திருவண்ணாமலை - தமிழக மாவட்டங்கள்
ஆரணி :
ஆரணியில் பட்டு நெசவு மிகுதியாகும். ஆரணியில் தயாராகும் பட்டுச் சேலைகள் உலகப் புகழ்பெற்றவை. பட்டுத் துணியில் அழகாக அச்சுப் போடும் கலை இம் மாவட்டத்தில வியக்கத்தக்களவு வளர்ந்து வருகிறது.
பட்டுச்செடி நடுதல் :
பட்டுச் செடி நடுவதன் மூலம், நிறைய வருவாய் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பயிரிட்டு ஆண்டு வருமானம் 20,000 முதல் 30,000 வரை பெறலாம். ஒரு ஏக்கருக்கு 5 பேருக்கு வேலை கிடைக்கும். குறைந்த நீர் பாசனத்திலும் அதக வருவாய் தரக் கூடியது.
கூட்டுறவுத் துறை :
இந்தியாவில் கூட்டுறவுத் துறையில் தமிழகம் மூன்றாவது இடம் வகிக்கிறது. தமிழகத்தில் 4-வது இடத்தைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது.
கூட்டுறவுத் துறைமுகம் வளந்துள்ள நிறுவனங்கள் :
1. கூட்டுறவு விவசாய சேவைச் சங்கம்
2. கூட்டுறவு வங்கி
3. கூட்டுறவு விற்பனைச் சங்கம்
4. கூட்டுறவு பண்டக சாலை
5. கற்பகசம் கூட்டுறவு சிறப்பங்காடி
6. திருவண்ணாமலை பால் கூட்டுறவு சங்கம்
7. பல்நோக்கு கூட்டுறவு சங்கம் (மலைவாழ் மக்களுக்கு)
கூட்டுறவு அச்சகம் :
1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அரியூர் கூட்டுறவு நூற்பாலை :
இந்த நூற்பாலையில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்குத் தேவையான நூல்களும் மற்றும் டெரிகாட்டன் நூலும் தயாராகின்றன 26,656 கதிர்களும் கொண்டது.
பால்வளம் :
கிராமப் புறங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய விலைக்கு பாலைப் பெற்று, பின்பு பதப்படுத்தி, சென்னை மற்றும் உள்ளூர் தேவைக்கு ஏற்ற தரமான பாலை வழங்கும் சீரிய பணியில் இம்மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பால் உற்த்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 1,50,000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 80 சதவீதம் சென்னைக்குச் செல்கிறது.
புகழ் பெற்ற பெருமக்கள் :
சி.பி.இராமசாமி அய்யர் :
சி.பி.இராமசாமி அய்யர் |
டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் :
சென்னை பல்கலைக் கழக தமிழ்துறை தலைவரான இவர் கண்பிச்சுபுரத்தில் பிறந்தவர். கவிஞர் வல்லம் வேங்கடபதி, மனசைப.கீரன், திருவேங்கம் முதலியோர் இம்மாவட்ட கவிஞர்கள். திராவிட இயக்க தூண்களில் ஒருவரான ப.உ.சண்முகம் திருவண்ணா மலைக்காரர். கேரளம், புதுவைப் மாநில முதல்வராக இருந்த பா.ராமச்சந்திரன் செய்யாற்றுக்காரர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவண்ணாமலை - Tiruvannamalai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கூட்டுறவு, திருவண்ணாமலை, சங்கம், பால், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இவர், கூட்டுறவுத், தமிழ்நாட்டுத், தகவல்கள், சென்னை, பல்கலைக், | , பிறந்தவர், அய்யர், இராமசாமி, வருவாய், districts, tiruvannamalai, information, ஆரணியில், வருகிறது, பட்டுச், ஆண்டு