திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
தொழில் :
மதராஸ் ரிபைனரிஸ் லிமிட்டெட் :
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் பன்னிரண்டில் ஒன்பதாவதாக மணலியில் தொடங்கப் பட்டது. நாட்டின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் எட்டில் ஒரு பங்கை இந்த ஆலை பெற்றுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு என்ஜினியரிங் பயிற்சிப் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பல கச்சா எண்ணெய் வகைகளை ஆராயவும், உற்பத்தியை இன்னும் சிக்கனமான முறையில் பெருக்கவும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் அமைக்கப் பட்டுள்ளது. 28 இலட்சம் டன் உற்பத்தியை ஓராண்டுக்குத் தருகிறது. நாட்டின் இரண்டாவது மெழுகு ஆலையான பாரபின் மெழுகு ஆலை 1984 முதல் இங்கு செயலாற்றுகிறது. ரூ.18 கோடி செலவில் 20,000 டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலை நவீன சாதனங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மணலியில் உரத் தொழிலகங்களும் உள்ளன.
அசோக் லேலண்டு :
அசோக் லேலண்டு |
கார்பொரண்டம் யுனிவர்சல் லிமிட்டெட் :
1955 இல் இத்தொழிற்சாலை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டது. உப்புத்தாள்கள் செய்வதற்காக பிரிட்டன் தொழில் நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. ஆண்டுதோறும் 1000 டன்களுக்கு மேற்பட்ட பாண்டர் அப்ரசிவ்சும், 60,000 ரீம்கள் கோட்டட் அப்ரசிவ்சும் இதன் உற்பத்தியாகும். மரச்சாமான்களைப் பளபளப்பாக்குவதற்கும், இரும்பு, எஃகுக் கருவிகளைத் தீட்டுவதற்கும், கண்ணாடி, கத்தி முதலியவற்றை தேய்ப்பதற்கும் இந்த உப்புத்தாள்கள் இன்றியமையாதவை. பென்சில், பேனா, தோல், பிளாஸ்டிக், மின்சார விசிறி, சைக்கிள், வானொலிப்பெட்டி, வாகனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இப்பொருட்களை மிகுதியாக வாங்குகின்றன.
என்பீல்டு இந்தியா :
1958 இல் திருவொற்றியூரில் தொடங்கப்பட்டது. ஆசியாவில் ஏற்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை இதுவே. பிரிட்டனில் உள்ள என்பீல்டு கம்பெனியின் கூட்டு முயற்சியுடன் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையில் ஆண்டுதோறும் சுமார் 10,000 மோட்டார் சைக்கிள்களும், 10,000 ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. தேவைப்படும் உறுப்புகளில் 80 சதவீதம் இங்கேயே தயாராகிறது. இரயில்வே இலாக்காவுக்கும், வேறுபல நிறுவனங்களுக்கும் தேவைப்படும் யந்திர பாகங்களும் இங்கே உற்பத்தியாகின்றன. வெளிநாடுகள் பலவற்றிற்கும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் முதலியன ஏற்றுமதி செய்யப் படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
மெட்டல் பாக்ஸ் கம்பெனி :
திருவொற்றியூரில் அமைந்துள்ள இத்தொழிற்சாலையில் எல்லா வகையான பொருட்களையும் அடைப்பதற்கான அலுமினியப் பெட்டிகளும், தகரப் பெட்டிகளும் செய்யப்படுகின்றன. அத்துடன் இந்த உலோகப் பெட்டிகளின் மேல் அழகிய வண்ண அச்சு வேலைகளும் செய்து தரப்படுகிறது. இதன் கிளைகள் இந்தியாவில் பம்பாய், கல்கத்தா முதலிய பெருநகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
டன்லப் இரப்பர் கம்பெனி :
அம்பத்தூரில் பெரும் நிலப்பரப்பு ஒன்றில் இக்கம்பெனி நடைபெற்று வருகிறது. இதன் கிளைகள் பல இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளன. இங்கு சைக்கிள், மோட்டார், சைக்கிள் மோட்டார், எந்திர உழவு வண்டி, விமானம் ஆகியவற்றிற்குத் தேவையான இரப்பர் குழாய்கள், டயர்கள் முதலியவற்றைத் தயாரிக்கிறார்கள். இவை உள்நாட்டுத் தேவைக்குப் போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிற இரப்பர் பொருள்களும் இங்கே தயாராகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மோட்டார், சைக்கிள், எண்ணெய், இதன், tamilnadu, திருவள்ளூர், தமிழக, மாவட்டங்கள், செய்யப்படுகின்றன, லேலண்டு, இத்தொழிற்சாலையில், திருவொற்றியூரில், இரப்பர், பெட்டிகளும், இங்கு, வருகிறது, தொழிற்சாலை, அசோக், சுத்திகரிப்பு, தமிழ்நாட்டுத், தகவல்கள், உள்ள, தேவைப்படும், படுகின்றன, என்பீல்டு, ஆண்டுதோறும், அப்ரசிவ்சும், இங்கே, thiruvallur, | , கிளைகள், கம்பெனி, ஏற்றுமதி, districts, உப்புத்தாள்கள், இந்தியா, திறன், மணலியில், நாட்டின், மெழுகு, அமைக்கப்பட்டுள்ளது, உற்பத்தியை, இந்தியாவில், வெளிநாடுகளுக்கும், தொழில், ஒன்று, லிமிட்டெட், கூட்டு, இத்தொழிற்சாலை, information