திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருநெல்வேலி |
பரப்பு : | 6,693 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,077,233 (2011) |
எழுத்தறிவு : | 2,273,457 (82.50 %) |
ஆண்கள் : | 1,520,912 |
பெண்கள் : | 1,556,321 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 460 |
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்ச நல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்ட தையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப் பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.
சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறை யிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்டத்தன : நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம். பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன் பிள்ளையும் ஆவர்.
பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :
சேரன் மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீலவ பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப் பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன் கோட்டையில் காணலாம். வீர கேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொதுவிவரங்கள்:
மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல்
நிலையங்கள்: 80; சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகங்கள்:
48,773; அஞ்சலகங்கள்: 553; தொலைபேசிகள்: 29,779.
எல்லைகள் :
கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும்தூத்துக்குடி மாவட்டத்தையும்;
மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்;
தெற்கில் கன்னியாகுமரி
மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
மாநகராட்சி-1; திருநெல்வேலி. நகராட்சிகள் :6; ஊராட்சி ஒன்றியம்
:19; பேரூராட்சிகள் 39; சட்டசபை தொகுதிகள் :11 1) திருநெல்வேலி 2)
பாளையங்கோட்டை 3) சேரன் மாதேவி 4) அம்பா சமுத்திரம் 5) தென்காசி
6) ஆலங்குளம் 7) வாசுதேவநல்லூர் 8) சங்கரன் கோவில் 9) இராதாபுரம்
10) நாங்குநேரி 11) கடையநல்லூர்.
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருநெல்வேலி, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, தமிழ்நாட்டுத், தகவல்கள், மாவட்டத்தையும், சேரன், ஊற்றுமலை, நாயக்கர், | , முதுமக்கள், பாண்டியர், நிலையங்கள், தாழிகள், ஆய்வுகள், information, districts, tirunelveli, மக்கள், வரலாறு, ஆயுதங்கள், நாடுகளுக்கும், காலத்தில்