தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
சரஸ்வதி மகால் :
யானைக் கட்டும் கட்டுத்தறிக்கு எதிரே சரஸ்வதி மகால் இருக்கிறது. சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' என்ற நூல் நிலையமே பின்னர் வந்த மராட்டியர் களால் செழுமைபடுத்தப்பட்டது என்று ஆய்வாளர் வேணுகோபால் தெரிவிக்கிறார். முதலில் நம்மை வரவேற்பது மராட்டியர் கால ஓவியமான சரஸ்வதி. உள்ளே நுழைந்தவுடன் இராமர் பட்டா பிஷேக ஓவியம். வலது பக்கம் உள்ள அறையில் இருப்பவை அனைத்தும் சரபோஜியின் சேமிப்பு.
சரஸ்வதி மகால் |
தர்பார் ஹால்:
தஞ்சையின் தர்பார் ஹால், மதுரை நாயக்கர் மகாலின் சிறிய தோற்றம் போல காணப் படுகிறது. அரசர் அமரும் இடத்தின் பின்புறம் சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம் வரையப்பட்டுள்ளது. மந்திரிபிரதானிகள், படையினர், முதலியோர் இருக்கும் இடம் அழகாக காணப்படுகிறது. தர்பார் ஹாலின் இட, வலப்புற மாடங்களில் ராணிகள்/பெண்கள் இருந்து கொண்டு அரசவையின் நிகழ்ச்சிகள் காணும் இடங்கள் அழகாக அமைக்கப் பட்டுள்ளன.
அரண்மனையின் மையப் பகுதியில் கூட கோபுரம் இருக்கிறது. எட்டடுக்கு உள்ள கோபுர வடிவிலான மாடி அமைப்பு மேலே போகப் போக குவிந்து கொண்டே செல்கிறது. இதன் மேலிருந்து 10 கி.மீ. வரை தெளிவாக பார்க்க முடிகிறது. இது போலவே மாடங்கள் உள்ள மாளிகையும் மேலே ஏறுவதற்கான படிக்கட்டு அமைப்பும் அழகாகவும், கட்டட தொழிற் நுட்பத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதற்கடுத்து கிழக்கு வாசல் வரும் வழியையும், ராஜா உயர்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் உயர்நிலைப் பள்ளியும், திடல்களும் விளையாட்டு மைதானங்களும் கோட்டைக்குள்ளே அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ராஜா உயர்நிலைப் பள்ளியின் மேல் பகுதி. அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு விளையாட்டுக்களை காணக்கூடிய அழகான கட்டடக் கலை.
பீரங்கி மேடு:
கோட்டையிலிருந்து வெளியே செல்வதற்கான வடக்கு வாசல், கிழக்கு வாயில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாசலின் இடதுபுறம் உள்ள மேட்டில் பீரங்கி காணப்படுகிறது.தமிழகத்தில் வேறு எங்குமே காணமுடியாத 'நிலைபீரங்கி' இங்கு மட்டும்தான் காணப் படுகிறது. இதன் அளவு மிகப்பெரிய அளவுடையது. வெடிமருந்தை முழுவதும் இடித்து விட்டு, பீரங்கிக்கு கீழேயுள்ள கிணற்றிலிருந்து வெடிதிரியை கொழுத்தும் அமைப்பு காணப்படுகிறது.
அகழி:
ஊரைச் சுற்றி பெரிய அளவு அகழியை இன்றும் காணலாம். அகழியின் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் மண்மேடிட்டு சாலைகள் போடப்பட்டு விட்டன. சிவகங்கைக் குளம், சாமந்தன் குளம், சேவப்ப நாயக்கன் ஏரி, தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோவில் வரை செல்லும் ஏரி போன்றவை நாயக்க, மராட்டிய கால நீர்நிலை தேக்க அமைப்பின் அழகைப் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சங்கம்:
தஞ்சையின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் கரந்தட்டாங்குடி இருக்கிறது. கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது. கோட்டையின் அகழியை அடுத்து வெளியில் உள்ள ஊர் இது. இங்கு 1911 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றிற்கு இச்சங்கம் பல்வகையில் பணியாற்றியுள்ளது. இதன் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் வழக்கறிஞர் தமிழவேள் உமாமகேசுவரனார் ஆவார். பல காலமாக 'தமிழ் பொழில்' என்ற செந்தமிழ் மாத இதழை இச்சங்கம் நடத்தி வருகிறது. புலவர் தேர்வு நடத்தி பல புலவர்களைச் சங்கம் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்குப் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கரந்தை கவியரசு வேங்கடாசலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தாமி பிள்ளை, பேரா. பாலசுந்தரம், வரலாற்றறிஞர் சீ. கோவிந்த ராசனார் முதலியோர் ஆவர். சங்கத்திற்கு வராத தமிழ் அறிஞர்களே கிடையாது. கரந்தை செப்பேட்டை கண்டுபிடித்து சங்கம் பாதுகாத்து வருகிறது. 'யாழ்நூல்' கண்ட விபுலானந்தருக்கு உதவி செய்து நூலை சங்கம்தான் வெளியிட்டது. இந்தி போரில் கலந்து கொண்ட போராட்ட வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தது. தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பிடித்திருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சரஸ்வதி, உள்ள, தமிழ், மகால், தஞ்சாவூர், கரந்தை, சங்கம், அழகாக, தமிழக, tamilnadu, கிழக்கு, மாவட்டங்கள், இதன், தர்பார், வருகிறது, காணப்படுகிறது, தமிழ்நாட்டுத், மராட்டிய, தகவல்கள், இருக்கிறது, கொண்டு, பீரங்கி, உயர்நிலைப், ராஜா, வாசல், தமிழ்ச், இச்சங்கம், நடத்தி, | , தமிழர், குளம், இங்கு, அளவு, அகழியை, வடக்கு, காணப், மராட்டியர், ராமாயணம், தெலுங்கு, நூல், information, thanjavur, districts, தேர்வு, செய்து, பின்புறம், முதலியோர், அமைப்பு, படுகிறது, தோற்றம், ஹால், தஞ்சையின், மேலே