தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | தஞ்சாவூர் |
பரப்பு : | 3,411 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,405,890 (2011) |
எழுத்தறிவு : | 1,790,998 (82.64 %) |
ஆண்கள் : | 1,182,416 |
பெண்கள் : | 1,223,474 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 705 |
பெயர்க்காரணம்:
தஞ்சாறை (ஆறை- அரண்) தஞ்சம் அடைந்தவர்களுக்கு அரணாக விளங்குவது என்னும் பொருளில் அமைந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு:
தஞ்சை மாவட்டம் பிற்கால சோழ மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கியது. காவிரியால் வளம் கொழிப்பதால் இதைப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று எண்ணும் அளவிற்கு புகழ் பெற்றது. தமிழகத்தின் ஒரே பேரரசான சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரே திகழ்ந்தது. பல்லவர்களின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் தஞ்சையை ஓர் நகராக்கி ஆண்டவர்கள் முத்திரையர்களே ஆவர். பிற்கால சோழராட்சியைத் தொடங்கி வைத்த விஜயலாய சோழன் முத்திரையர்களை வென்று தஞ்சையை தலைமையிட மாக்கியபின் கிட்டத்தட்ட சோழராட்சி 429 வருடங்கள் இருந்ததை யாரும் மறக்க முடியாது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், பின்னர் செல்லப்ப நாயக்கர், சேவப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகியோரால் ஆளப்பட்டது; 1675 இல் மராட்டியர் கையில் விழுந்தது. சரபோஜி காலத்தில் வெள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொது விவரங்கள்:
தஞ்சை மாவட்டத்தின் தலைநகர் தஞ்சாவூர். இதன் பரப்பு: 3,602,86 ச.கி.மீ; மக்கள் தொகை: 21,38,845; பள்ளிகள்: 1558; கல்லூரிகள்: 30; பல்கலைக் கழகம்: தமிழ் பல்கலைக் கழகம்; ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினி ஆறு, அரசலாறு. காவிரி, கொள்ளிடம்; மழையளவு: சராசரி 102 மி.மீ; சாலை நீளம்: 2021.2 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள்: 18,556; மருத்துவமனைகள் 21; வங்கிகள் 224; தொலைபேசிகள்: 21,997; திரையரங்குகள் 98. எல்லைகள்: கிழக்கில் நாகை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்; தென்மேற்கில் வங்காள விரிகுடா; மேற்கில் புதுக்கோட்டை; வடக்கில் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள்.
உள்ளாட்சிகள்:
நகராட்சி-3; தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம்; ஊராட்சி ஒன்றியங்கள்-14, சட்டசபை தொகுதிகள்: 9; பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர்; நாடாளுமன்ற தொகுதி-1, தஞ்சாவூர்.
வழிபாட்டிடங்கள்:
தஞ்சாவூர், குடந்தை, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், திருநாகேசுவரம், ஒப்பிலியப்பன் கோவில், பூண்டி மாதா கோவில், வளத்தூர் மசூதி, திருவையாறு ஐயாறப்பர் கோவில், மாரியம்மன் கோவில்.
திருவிழாக்கள்:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் குடந்தையில் நடைபெறும். தஞ்சையில் இராசராசனின் சதயத் திருநாள்; முத்துப் பல்லாக்கு; மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு, பொங்கல், கார்த்திகை, திருவையாரில் சப்தஸ்தானம், தியாகராஜ ஆராதனை முதலியன.
சுற்றுலாத் தலங்கள்:
தஞ்சை, குடந்தை, தாராசுரம், திருவிடைமருதூர், திருவையாறு, ஒரத்தநாடு, மனோரா மற்றும் சோழர்கள் கோயில்கள் உள்ள திருப்பனந்தாள், புள்ளமங்கை முதலிய ஊர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தஞ்சாவூர், மாவட்டங்கள், தஞ்சை, கோவில், tamilnadu, தமிழக, திருவையாறு, நாயக்கர், மாவட்டம், மக்கள், திருவிடைமருதூர், தமிழ்நாட்டுத், தகவல்கள், கழகம், | , பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, குடந்தை, பல்கலைக், கும்பகோணம், பிற்கால, information, districts, thanjavur, பரப்பு, தொகை, காலத்தில், சோழர்கள், சோழ, தஞ்சையை