');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
சேலம்:
சேலம்
என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு.
கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர். சேலம் நகரத்தில்
வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள
மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில்
வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை
வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு
இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை
விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
|
சேலம் |
இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம்
சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.
சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது.
வெள்ளி விடுமுறை. சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்:
இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10
கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா
மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10
கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது
சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
சுகவனேசுவரர் கோயில்:
|
சுகவனேசுவரர் கோயில் |
கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார்,
கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும்
திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு
பார்க்கும்போது கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம்.
இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம்,
நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது.
இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர்.
இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு
வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார்.
வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில்
எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற்
சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி,
கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின்
மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில்
காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால்
கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில்
சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த
வரப்பிரசாதிகள்.
மேட்டூர்:
|
மேட்டூர் அணை |
சேலத்திலிருந்து
52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ்
என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள்
ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து -
குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம்
தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000
ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து
ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா
அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன.
இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும்
உள்ளன.
ஏற்காடு:
|
ஏற்காடு |
'ஏழைகளின் ஊட்டி' என்று ஏற்காடு
அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் குறிப்பிடத்தக்க
மலைவாழிடத்தில் இவ்வூரும் ஒன்று. சேர்வராயன் மலைத் தொடரில்
அமைந்துள்ளது. 383 சதுர கி.மீ. இவ்வூர் அமைந்துள்ளது. நில
மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம்
ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர்.
ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும் 13
டிகிரி செல்சியசுக்கு குறையாமலும் இருப்பது இதன் சிறப்பு.
சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவுதான்
உள்ளது. ஏற்காட்டில் முதலில் நம்மை கவரும் இடம் 'ஏரி'தான்.
அமைதியான, குளிர்ச்சியான, மரங்களடர்ந்த சூழலில் படகுச் சவாரி
செய்வது மனதுக்கு இன்பமளிக்கும். இதையடுத்து அண்ணா பூங்கா
வண்ணமயமாக அமைந்துள்ளது. 'லேடிசீட்' பகுதியிலிருந்து
தொலைநோக்கியின் மூலம் அற்புதமான காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.
இரவில் சேலத்தின் ஒளிவண்ணமான காட்சியை காணலாம். 'பகோடா' முனை என்ற
முகட்டிலிருந்தும் மலையின் இயற்கையழகைக் கண்டுகளிக்கலாம்.
'கிள்ளியூர் அருவி' 3000 அடியிலிருந்து விழும் அழகைக் காணலாம்.
கோட்டை போன்ற பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக
எம்.டி.காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான
கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய
இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து
பயிரிட்டார். சேர்வராயன் கோயில் போகும் வழியில் உள்ள நார்டன்
பங்களா அருகில் 'கரடிக்குகை' இருக்கிறது. இதுவும் காண வேண்டிய
இடமாகும். சேர்வராயன் கோயில் திருவிழாவை ஒவ்வோராண்டும் 'மே'
மாதம், இங்குள்ள பழங்குடிகள் கொண்டாடுகின்றன. கோடைவிழா சித்திரை
மாதத்தில் இங்கு ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. கோடை விழாவில்
மலர்க்காட்சி முக்கியமானது. அதுசமயம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்
இங்கு நடைபெறும்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->