இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
முக்கியத் தீவுகள்:
இம்மாவட்டத்தச் சுற்றி பல தீவுகள் உள்ளன. அவைகளில் இராமேஸ்வரம் நீங்கலாக இராமநாதபுரம் வட்டத்தில் பதினொரு தீவுகளும் முதுகுளத்தூர் வட்டத்தில் ஐந்து தீவுகளும் உள்ளன. எல்லாத் தீவுகளிலும் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
மணலித் தீவு
பாம்பனிலிருநது 7 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இப்பகுதியில் கடல் ஆழமற்றுக் கிடக்கிறது. இத்தீவில் சுண்ணாம்பு கல் படிவங்கள் மிகுதியாக காணப்படுகிறது. கருவாடும் தேங்காயும் ஏற்றுமதியாகின்றன. களங்கட்டி மீன் பிடித்தல் முறையில் மூங்கில் குச்சிகளை சதுரமாக கடலில் நட்டு, வலைகளை அமைத்து மீன் பிடிக்கின்றனர்.
முயல் தீவு |
ஏராளமான முயல்கள் இத்தீவில் இருப்பதால் முயல் தீவு என்று பெயர் பெற்றது. இதற்கும் மண்டபம் தங்குமிடத்திற்கும் 10 கி.மீ. தொலைவு.
தலையாரித் தீவு:
இத்தீவில் சுண்ணாம்புக் கல் மிகுதியாகக் கிடைக்கிறது. கீழக்கரைக்கு தென்கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆனைப் பாறைத் தீவு:
பாறைகள் மிகுந்த இத்தீவு பிள்ளையார் முனைத் தீவுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிங்களத் தீவு:
மீன்பிடித்தல், இத்தீவில் முக்கியத் தொழில். சிங்களத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் இங்குத் தங்கிச் செல்வது வழக்கமாதலால், இது சிங்களத் தீவு எனப் பெயர் பெற்றது. இத்தீவு குருசடைத் தீவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
குருசடைத் தீவு:
பாம்பனிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இத்தீவின் சுற்றளவு 4 1/2 கி.மீ. தமிழக அரசின் மீன் ஆராய்ச்சி நிலையமும், உயிரியல் காட்சிக் கூடமும் இங்குள்ளன. ஜெல்லி செய்ய உதவும் பாசி ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. ஆலைத் தொழிலுக்கு உதவும் சில அமிலங்களில் சேர்க்கப்படும் 'சார்க்காசம்' என்ற பொருளும், பெயிண்டு செய்ய உதவும் சில பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. ரோஜாப்பூ நிற சூரியகாந்தி, நிக்கோபார் இளநீர், செவ்விள நீர் ஆகியனவும் கிடைக்கின்றன. குருசடைத் தீவில் முத்துச் சிப்பி வளர்க்கும் நிலையம் பணியிலிருந்து இப்போது மூடப்பட்டுள்ளது. மூடிக்கிடக்கும் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கினால் தமிழகம் உலக முத்துச் சந்தையில் முதலிடம் பெறும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைகளில் முத்துக் குளித்தலைப் பற்றி மார்க்கோபோலோ என்னும் வெளிநாட்டு வரலாற்றாசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.
சுளித் தீவு:
இத்தீவு மணற்பாங்கான பொட்டல் வெளியாகும். நல்லத் தண்ணீர்த் தீவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது.
வாளைத் தீவு:
வாலித் தீவு, வலைத்தீவு என்றும் இத்தீவைக் குறிப்பிடுவர். முளித் தீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கிழத்தேரியம்மன் மாதாக்கோவில் என்று அழைக்கின்றனர். இங்கு மீன்கள் அதிகமாய்க் கிடைக்கின்றன.
அப்பா தீவு:
கீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவில் பவளப் பாறைகள் அதிகமாய்க் காணப்படுகின்றன. மனிதர்கள் வசிப்பதில்லை.
பூமறிச்சான் தீவு:
மேடான பகுதியில், பாம்பனிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவு பெரிய கண்டத் தீவு, நடுத்தீவு, பூமறிச்சான் தீவு என்று முப்பகுதியினைக் கொண்டுள்ளது. பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் இத்தீவுக்கு வழங்கப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தீவு, தொலைவில், உள்ளது, இராமநாதபுரம், இத்தீவு, தமிழக, இத்தீவில், tamilnadu, மாவட்டங்கள், குருசடைத், கிடைக்கின்றன, உதவும், தீவிலிருந்து, முயல், மீன், தகவல்கள், தமிழ்நாட்டுத், செய்ய, பாம்பனிலிருந்து, இங்கு, முத்துச், | , பூமறிச்சான், அதிகமாய்க், districts, information, தீவுகள், வட்டத்தில், தீவுகளும், மீன்பிடித்தல், முக்கியத், பெயர், சிங்களத், பாறைகள், பெற்றது, ramanathapuram