இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
முக்கிய ஊர்கள்:
இம்மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையும் முக்கிய நகர்களையும் பற்றி இங்குக் காண்போம்.
இராமநாதபுரம் நகரம்:
இராமநாதபுரம் நகராட்சி 1959 இல் ஏற்பட்டது. இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகத்தில் அமைந்த ஊராதலால் இதை 'முகவை' என்று குறிப்பிடுவர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், திருப்புல்லணை, உத்திரகோசமங்கை ஆகிய தலங்களுக்கு, இந்நகர் வழியேதான் செல்ல முடியும். 1772லிருந்து 1792 வரை இது ஆங்கிலேயரின் ராணுவத் தளமாக இருந்தது. 1949 இல் இராமநாதபுரம் ஜமீன் தமிழக அரசின் ஆட்சி பொறுப்புக்கு வந்தது.
இராமநாதபுரம் அரண்மனை |
1978 முதல் தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்த அரண்மனையைத் தங்கள் பொறுப்பில் ஏற்று பராமரித்து வருகின்றனர். இராமநாதபுரம் மிளகாய் சந்தை தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தையாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் மிளகாய் சாகுபடி செய்து, தொடர்ந்து ஆறு மாதங்கள் இவ்வியாபாரம் நடைபெறுகிறது. தேங்காய் மொத்த வணிகத்திற்கும் இவ்வூர் பெயர் பெற்றது. புதன்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சித்தார்கோட்டை:
இவ்வூரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்கள் பனையோலையைக் கொண்டு பல அழகுப் பொருட்களைச் செய்து விற்பனை செய்து வாழ்கின்றனர்.
தேவிப்பட்டிணம்:
இது இராமநாதபுரத்திற்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றுர். நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவ்வூரை 'நவபாசனம்' என்று அழைக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தென்னம் பண்ணையும், பழத்தோட்டங்களும் இங்கு உள்ளன. இவ்வூரில் பாதிப்பேர் முஸ்லீம்கள். இது ஒரு சுற்றுலா தலமாகும்.
கீழக்கரை:
இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது இச்சிறு துறைமுகம். இங்கிருந்து அருகிலுள்ள கரையோரப் பட்டினங்களுக்குப் படகுகளில் பொருட்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இவ்வூரே பாண்டியர்களின் பண்டையத் துறைமுகமான கொற்கை என்று கருதப் படுகிறது. செந்தமிழ் வளர்த்த சீதக்காதி இவ்வூரினர். இவ்வூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இங்கு வாழ்கின்றனர். சங்குகளை அறுத்து அணிகலன்கள் செய்தல், மீன்பிடித்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற தொழில்கள் இங்கு மிகுதி.
அழகன்குளம்:
இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றுர். 1983 இல் இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ரோமானியர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு ஆதாரமாக சங்குக் குவியல்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது. இங்கு மருதுப்பாண்டியர் கட்டிய கோவிலும், சத்திரமும் உள்ளன. ரோமானியர் பயன்படுத்திய மதுச்சாடிகளும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் ரோம் நாட்டு மன்னன் தலைப் பொறித்த நாணயமும், அணிகலன்களில் சேர்த்துக்கொள்ளும் மணிகளும் உயர்வகைக் கற்களும் இங்குக் கிடைத்துள்ளன. மெளரியர்களின் தொடர்புக்கு ஆதாரமாக அவர்கள் காலத்து ஓவியங்களும், கருவண்ணப் பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இராமநாதபுரம், தமிழக, இங்கு, காட்சிகள், tamilnadu, மாவட்டங்கள், செய்து, இராமலிங்க, தொலைவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், முஸ்லீம்கள், இவ்வூரில், இவ்வூர், வாழ்கின்றனர், பெரும்பான்மையினராக, இராமநாதபுரத்திலிருந்து, கிடைத்துள்ளன, | , ஆதாரமாக, அழகன்குளம், செய்தல், சிற்றுர், போன்ற, இங்குக், அரசின், முக்கிய, information, ramanathapuram, districts, கோவிலும், விலாசம், மிளகாய், சந்தை, தொல்பொருள், சித்தரிக்கும், நடந்த, தமிழ்நாட்டில்