நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
ஆடி 18-லும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களிலும் இங்கே
காவிரிக்கரையில் பல்லாயிரம் மக்கள் நீராடுவர். ஐப்பசி மாதத்தின்
கடைசி நாளில்-கடை முகத்தன்று முழுகுவர். அன்று வரமுடியாதவர்கள்
கார்த்திகை முதல் நாளில் முழுகுவர் அன்றைய பெயர்: 'முடவன்
முழுக்கு நாள்'.
நாகப்பட்டினம்:
1782-முதல் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு, பிரிட்டிஷார் தஞ்சை மாவட்டத்தை ஆளத்தொடங்கினர். 1844- நாகப்பட்டினத்தில் அர்ச். சூசையப்பர் கல்லூரி தொடங்கப் பெற்றது. 1861 நாகையிலிருந்து
நாகப்பட்டினம் |
தென்னிந்திய இரயில்வேயின் தொழிற்கூடம் பல ஆண்டுகள் நாகையில் இருந்தது. 1928-இல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். இங்கிருந்த பலர் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அதற்குக்காரணம் சுதந்திரத்திற்கு பிறகு பலமுறை புயலா இவ்வூர் பாதிக்கப்பட்டதுதான். 1941 க்குப்பிறகு நாகை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இழந்தது. அந்த இடத்தை தூத்துக்குடி பெற்றது.
டச்சு ஆட்சியின் அறிகுறிகளாக செயிட்பீட்டர் தேவாலயம், ஹாலண்டு பங்களா, 20 அடி உயரமுள்ள கொடிமரம், டச்சுமார்கெட், ஹாலாண்டு ரோடு போன்றவை இன்றளவும் உள்ளன.
வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் தற்போது புகழ்பெற்று விளங்கும் தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகும்.
நாகை பாடல்பெற்ற தலம் சப்த விடங்கர் தலங்களுள் இது ஒன்று. இறைவன் பெயர் காயாரோகணசாமி, அம்மன்: நீலாய தாட்சி, இக்கோயிலில் நவக்கிரகங்கள் யாவும் மேற்கு நோக்கியிருக்கின்றன. வைகாசி பிரமோற்சவமும், ஆடிப்பூரத்தன்று பீங்கான் ரத விழாவிலும் இங்கு காணத்தக்கவை.
சிக்கல் |
நாகையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சிக்கல் சிங்கார வேலன் கோவில் எழுநிலை மாடமும் 80 அடி உயரமுள்ள கோபுரமாக இருக்கிறது. இங்குள்ள தங்க மயிலும், தங்க ஆட்டுக்கிடா வாகனமும் காணத்தக்கவை. சிவபெருமான், சிங்காரவேலர் திருவுருவங்கள் கட்டுமலையின் மேலுள்ளன. கந்தசஷ்டி, கார்த்திகை விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எட்டுக்குடி:
எட்டிமரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் 'எட்டுக்குடி' என்ற பெயர் பெற்றது. நாகைக்கு தென்மேற்கே 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. எட்டுக்குடிக் கோயிலில் முருகனைத் தாங்கும் மயிலின் உருவம் கல்லில் இருந்த போதும் மயியின் கால்கள் கனமின்றி மென்மையாக இருப்பது காணத்தக்கது. இது ஒரு அரிய வேலைப்பாடாகும்.
இலங்கையிலுள்ள கதிர்காமம், திருக்கேதீச்சுரம், திருக்கோணமலை மூன்றும் இந்தியத்தமிழரின் ஈடுபாட்டுக்குரிய தலங்களாக இருப்பவை போல, ஈழத்தமிழர் வழிபடும் தமிழ்நாட்டுக் கோயில்களுள் சிதம்பரம், வேதாரண்யம், எட்டுக்குடி, திருவாலங்காடு ஆகிய நான்கும் முக்கியமானவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகப்பட்டினம், பெற்றது, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, எட்டுக்குடி, நாகையிலிருந்து, சிக்கல், இருக்கிறது, பெயர், தகவல்கள், தமிழ்நாட்டுத், districts, தொலைவில், பாடல், | , nagapattinam, தங்க, காணத்தக்கவை, உயரமுள்ள, ஐப்பசி, கார்த்திகை, முழுகுவர், information, பொன்மலைக்கு, நாளில், நாகை, தலம்