நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | நாகப்பட்டினம் |
பரப்பு : | 2,569 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,616,450 (2011) |
எழுத்தறிவு : | 1,213,008 (83.59 %) |
ஆண்கள் : | 798,127 |
பெண்கள் : | 818,323 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 629 |
வரலாறு:
நாகப்பட்டினம் பண்டைய காலமுதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை 'நாகர்' என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று'. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது. 'பதறிதிட்டு' என்னும் பகுதியில் முன்பு புத்தவிகாரை இருந்துள்ளது. இவ்விகாரை கி.மு. 265-270 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பெற்றிருக்கலாம். அசோகர் கல்வெட்டு சோழ, பாண்டிய நாடுகளில் புத்த பள்ளிகளை எழுப்பியதைக் கூறுகிறது. சினப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் எழுப்பித்த புத்தப்பள்ளியை நாகப்பட்டினத்தில் தான் கண்டதாகக் குறித்துள்ளார். புத்த விகாரங்களின் வெளிப்பகுதியில் சீன நாட்டு முறையில் கோபுரங்கள் இருந்துள்ளன. நரசிம்மவர்மன் காலத்தில் 'புதுவெளிகோபுரம்' ஒன்றை கட்டியுள்ளார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயம் மன்னர் சூளாமணிவர்மன் நாகையில் 'சூளாமணி விகாரை'யை அமைத்தான். இந்த பெளத்தபள்ளிக்கு இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை பள்ளிச்சந்தமாக தானமாக அளித்துள்ளனர். இதைப்பற்றிய செப்பேடு ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டனில் இன்றும் உள்ளது. நரசிம்மவர்மன் எழுப்பிய 'புதுவெளிகோபுரம்' 1882 வரை இருந்துள்ளது. பின்னர் கிருத்துவ குருமார்கள் ஆங்கில அரசிற்கு எழுதி இதை இடித்து விட்டனர். இதன் அடியில் கண்டெடுக்கப்பட்ட 5 புத்தர் சிலைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. நாகப்பட்டினத்தை அடுத்த' 'பரவை' என்ற கடற்துறை சார்ந்த ஊரில் 'நீர்ச்சூழல்' அடிக்கடி ஏற்பட்டு பல கலங்கள் மூழ்கியதற்கான அகச்சான்றுகள் பல கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் 'சோழகுல வல்லிபட்டினம்' என்ற பெயரைப் பெற்றிருந்தது. வணிக துறைமுகபட்டினமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயு வெளிப்பட்டுள்ளது. அக்கால மக்கள் இயற்கைவாயு வெளிப்பட்ட கிணற்றை 'புகையுண்ணிக்கிணறு' என்று அழைத்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்ச்சக்கீசியருக்கு தாரை வார்த்தனர். கி.பி. 1500 முதல் 1658 வரை ஆண்டனர். அக்காலத்தில் போர்ச்சுக்கீசியன் பல மீனவர்களை கொன்றனர். நாகூரில் இருந்து அரங்கநாதர் கோயிலை இடித்தனர். போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் இப்பகுதியை 1658 முதல் 1824 வரை ஆண்டனர் தஞ்சை மராட்டிய மன்னர் ஏக்கோஜியுடன் உடன் படிக்கை செய்து கொண்டு குத்தகையாக நாகையை எடுத்தனர். இவர்களுக்குப் பின் நாகை ஆங்கிலேயர் கைக்கு வந்தது. விடுதலைக்குப்பி தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991, அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகம்:
நகராட்சிகள்:3 ஊராட்சி ஒன்றியங்கள்:11 பேரூராட்சிகள்:10 பஞ்சாயத்துக்கள்: 432
சட்டசபை தொகுதிகள்:
6 (சீர்காழி, பூம்புகார் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், குத்தாலம்)
பாராளுமன்ற தொகுதிகள்:
2 : மயிலாடுதுறை நாகப்பட்டினம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாகப்பட்டினம், tamilnadu, இருந்து, மாவட்டங்கள், தமிழக, மக்கள், நாகையை, தஞ்சை, தமிழ்நாட்டுத், தகவல்கள், நாகை, வந்துள்ளது, மாவட்டம், தொகுதிகள், | , மயிலாடுதுறை, மன்னர், ஆண்டனர், அசோகர், பெயர், information, districts, nagapattinam, பின்னர், இருந்துள்ளது, நரசிம்மவர்மன், புத்த, காலத்தில், புதுவெளிகோபுரம்