மதுரை - தமிழக மாவட்டங்கள்
காந்தி அருங்காட்சியகம் :
![]() |
காந்தி அருங்காட்சியகம் |
முக்கிய ஊர்கள் :
மதுரை :
வரலாற்றுச் சிறப்பு பெற்றிருப்பதுடன், மக்கள்தொகை செறிந்த நகரமாயும் மதுரை மூதுர் திகழ்கிறது. இதன் வேறு பெயர்களாவன : நான்மாடக் கூடல், தென்மதுரை, ஆலவாய், சிவராசதானி, கடம்பவனம். மதுரை, நாகமலைக்கும் யானைமலைக்கும் இடையே வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைப்பு தாமரை மலர் போன்று அமைந்துள்ளது. கோயிலை மையமாக வைத்து அதன் கிழக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் வடக்கேயும் திக்கின் பெயரால் நான்கு வீதிகள் உள்ளன. நான்கு திக்குகளில் பரவிய வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு சின்னச் சதுரமாகும்.
ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி எனத் தமிழ்த் திங்கள்களின் பெயர்களை நகரின் வீதிகள் சூடியுள்ளன. ஆடி வீதி கோயிலுக்குள் உள்ளது. மதுரை ஒரு மாநகராட்சி ஆகும். பாடு தமிழ் வளர்த்த கூடல், தமிழ் கெழு கடல், மதுரை மூதுர், மாண்புடை மரபின் மதுரை, மதுரைப் பெரு நன்மாநகர், மணிமதுரை, மாடமதுரை மாநகர் என இலக்கியங் களில் மதுரை சிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரும் இந்நகரத்தை கோவில் மாநகர் என்றும், விழா மிகுந்த நகர் என்றும், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றும் புகழ்ந்திருக் கின்றனர்.
புராண வரலாறு : திருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் வரலாறைக் கூறுவ தாகும். அதில் காணும் கதைகளுக்கேற்ற அடையாளச் சின்னங்களை மதுரையில் இன்றும் காணலாம். ஏழுகடல் தெருவிலுள்ள குளம் மதுரை அரசி காஞ்சனமாலைக்காக ஏழு கடல்களையும் மதுரைக்கு அழைத்த கதையின் சின்னமாக விளங்குகிறது. வைகை ஆறு குண்டோதரனின் தாகத்தைத் தணிக்க ஏற்பட்டது. சமணர் மதுரையை அழிக்க அனுப்பிய பசு, நாகம், யானை இம்மூன்றின் பெயர்களில் மூன்று மலைகள் திகழ் கின்றன. பசுவை வெல்வதற்கு அனுப்பப்பட்ட இடபமும் ஒரு மலையாகி அழகர் மலை என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
மாணிக்கவாசருக்காக சொக்கநாதர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி. பின்னர் குதிரைகள் நரிகளாகச் சென்ற இடமே செல்லூர். அந்நரிகள் கத்திச் சென்ற இடம் கத்துநரி என்பது. இப்பொழுது தத்தனேரி என வழங்குகிறது. அந்நரிகள் ஒன்றை யொன்று தொடர்ந்து சென்ற இடம் தோடனேரி எனப்படும். மண்டியூர் என்பது வண்டியூர் என்றாகியுள்ளது. குதிரைகள் வந்தபொழுது இங்கு புழுதி மண்டியதால் இப் பெயர் பெற்றது. பாண்டியன் குதிரைகளை விலை மதிப்பிட்ட இடம் மதிச்சயம். பாண்டியர்களின் அரண்மனை இருந்த இடம் மாநகர். வெள்ளியம்பலத் தெரு, சிவ பெருமான் கால் மாற்றி ஆடியதைக் குறிப்பது. வலைவீச்சுத் தெப்பக்குளம், அவர் மீன் பிடித்த திருவிளையாடல் நிகழ்ச்சியைச் சார்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, இடம், மணியிலிருந்து, வீதி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், வரையிலும், அமைந்துள்ளது, மாநகர், சென்ற, என்றும், வீதிகள், அவர், காந்தி, கட்டி, தகவல்கள், தமிழ்நாட்டுத், தமிழ், நான்கு, பெயரால், information, districts, என்பது, | , அந்நரிகள், madurai, திருவிளையாடல், குதிரைகள், கூடல், இங்கு, தூண், மாற்றி, காலை, இங்குள்ள, மூன்று, உள்ளது, வண்டியூர், அருங்காட்சியகம், காந்தியடிகள், மீட்டர், கட்டிடத்தைக், என்னும், வாழ்ந்த, மூதுர்