மதுரை - தமிழக மாவட்டங்கள்
சோழவந்தான் :
இது மதுரைக்கு வடமேற்கே 25கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை, இரயில் வசதிகள் பெற்றுள்ளது. வைகைக் கரையில் தென்னஞ் சோலையும் இயற்கை பேரெழிலும் அமையப் பெற்ற இவ்வூரினைக் கண்டு 'சோழன் உவந்தான்' என்னும் பெயர் ஏற்பட்டது. நெல் வேளாண்மையில் இவ்வூர் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. வைகைக் கரையில் பிரளயநாத சுவாமி கோவில் எழுந்துள்ளது. ஜனக நாராயணப் பெருமாள் கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ளன. இவ்வூர் வரலாற்றைத் தெரிவிக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இவ்வூரைச் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. பெரும் புலவராக விளங்கிய அரசன் சண்முகனார் இவ்வூரினர்.
திருவேடகம் :
வைகையின் வடகிழக்குக் கரையில் சோழவந்தானுக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அழகான சிவன் கோயில் உள்ளது. சமணர்களுடன் வாதிட்டு, சம்பந்தர் எழுதி வைகையில் விட்ட ஏடு, பெருவெள்ளத்தை எதிர்த்து கரை சேர்ந்த இடம் என்னும் காரணத்தால் இது ஏடகம் எனப் பெயர் பெற்றது. இந்நிகழ்ச்சி ஆவணித் திங்களில் 'எதிரேறிய திருவிழா' வாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வூரில் சுவாமி
சித்பவனாந்தர் ஆசிரமமும் விவேகானந்தர் கல்லூரியும். தொழிற் பள்ளியும் உள்ளன.
வேளாண்மை :
வேளாண்மைக்குப் பெரிதும் உதவும் ஏரி, கண்மாய் போன்றவைகள் மாவட்டத்து எல்லைப் பகுதிகளில் மட்டுமே உள்ளன. வைகை, பெரியாறு ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும், அவற்றிலிருந்து நீர் பெறப்படும் கால்வாய்ப்பகுதிகளிலும் கிடைக்கும் பாசன வசதிகளால் நெல், கரும்பு, சோளம், வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டதில் காப்பி, தேயிலை, பூக்கள், கேக்கோ, ஏலக்காய், புகையிலை, பஞ்சு, வெற்றிலை, காய்கறி முதலியன மிகுதியாய் விளைகின்றன காரணத்தால் இவை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கும் பல மாநிலங்களுக்கும் தினசரி அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் ஏலக்காய் அதிகமாய் விளைந்து அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது.
வேளாண்மைக் கல்லூரி :
![]() |
வேளாண்மைக் கல்லூரி |
மேலூர் கலப்பைகள் :
இங்கிலாந்து நவீன கலப்பை தயாரிக்கிற தொழில்நுட்பம் பர்மாவுக்கு வந்து, 1948 களின் இறுதியில் பர்மாவில் நவீன கலப்பைகளை தயாரித்த வி.எம்.தேவர், அங்கு பெற்ற அனுபவத்துடன் தன் சொந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்குத் திரும்பி, மேலூரில் கலப்பைத் தொழிற்சாலையை அமைத்தார். உழுவதற்கான கலப்பைகளையும், விதை விதைக்கும் கருவிகளையும், உரம் போடும் கருவிகளையும் தயாரிக்கத் தொடங் கினார். இப்போது மேலூரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலப்பைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. வி.எம் போஸ் உருவாக்கிய கலப்பைத் தொழிற்சாலையிலிருந்து வட மாநிலங்களுக்கு கூட கலப்பைகள் விநியோகமாகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஆராய்ச்சி, என்னும், நெல், கல்லூரி, கரையில், தகவல்கள், வேளாண்மைக், கலப்பைத், தமிழ்நாட்டுத், முதலியன, இப்போது, நவீன, கருவிகளையும், | , மேலூரில், ஏலக்காய், கலப்பைகள், நிலையம், இவ்வூர், தொலைவில், உள்ளது, information, districts, madurai, வைகைக், பெற்ற, இங்கு, காரணத்தால், மேற்பட்ட, சுவாமி, பெயர், வேளாண்மை