காஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்
10) மண்டோ பிரேக் சிஸ்டம்ஸ்
11) வேளியோ பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ்
12) போஸ்-ஹூண்டாய் ஸ்டீல் மேனுபாக்சரிங்
13) பி.எச்.சி. மேனுபாக்சரிங்
14) டாங்கீ விஷன்
15) யம்கோ ஜே.கே.எம். என்ஜியனீயரிங்
16வதாக பிரான்ஸ் நாட்டின் செயிண்ட்-கோபைன் மிதவைக் கண்ணாடித் தொழிற்சாலை ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் அரசு தொழிற்பூங்காவில் 22.1.98 அன்று தொடங்கப்பட்டது. செயிண்ட்-கோபைன் குரூப்பில் 42 நாடுகளில், 587 கம்பெனிகள், 1,10,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. கண்ணாடித் தொழிற் சாலைக்குத் தேவைப்படும் சிலிகா மணல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களிலும் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. மேலும் திருப்பெரும்புதூரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையும், ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனமும் அமைந்துள்ளன.
தொழில் வாய்ப்புகள் :
தமிழக அரசு சிறுதொழில் மையம் இம்மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் குறைந்த முதலீட்டில் கீழ்கண்ட தொழில்களைத் தொடங்குமாறு அறிவித்துள்ளது.
1) அட்டை தயாரித்தல்
2) மணிலா எண்ணெய் தயாரித்தல்
3) அரிசி தவிட்டு எண்ணெய் தயாரித்தல்
4) கையால் பேப்பர் தயாரித்தல்
5) மல்லிகைப்பூ எசைன்ஸ் தயாரித்தல்
6) மாட்டுத்தீவனம்
7) சேமியா
8) பழரசம், ஜாம், ஜல்லி
9) மருத்துவப் பயனுக்கான பஞ்சு
10) மிட்டாய் வகைகள்
11) வழைப்பழ, உருளைக்கிழங்கு வறுவல்
12) மரப்பொம்மைகள், மரநாற்காலிகள் மேஜைகள், மரக்கதவுகள், ஜன்னல்கள்
13) விசைத்தறிகள் உற்பத்தி செய்தல்
14) தோல் பொருட்கள் : செருப்புகள், பெட்டிகள், பைகள்,பெட்டிகள், தொழிலாளர் அணியும் கையுறைகள்
15) விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, கொழு,மற்ற உபகரணங்கள்
16) சைக்கிள்களுக்குத் தேவைப்படும் பெடல்கள், பிரேக்குகள், ஹப்புகள், ஸ்டாண்டுகள், பைகள், சிறிய பெட்டிகள், காரியர்கள். டியூப்லைட் பட்டிகள், டி.வி. பூஸ்டர்/ஆம்ளிபையர்
17) உலோக குழாய்களால் ஆன நாற்காலிகள், மேஜைகள் பஸ் லாரிகளுக்கு பாடி கட்டுதல்
18) அலுமினியப் பாத்திரங்கள், உபகரணங்கள்
19) ரேடியோ, டி.வி., டேப்ரிகார்டர்கள் (பல உபபொருட்களை கொண்டு பெட்டிகள் தயாரித்தல்)
20) மின்சார மோட்டார் ரீவைண்டிங், ரிப்பேர் செய்தல்
21) மைக்கா பொருட்கள் தயாரித்தல்
22) பிளாஷ்டிக் பொருட்கள் செய்தல்
23) சோபாக்களுக்கு வேண்டிய போம் இரப்பர் மெத்தைகள்
24) பினாயில், சுத்தம் செய்யும் பவுடர், கிரீஸ், தார் இவைகளைத் தயாரித்தல்.
25) வீடுகளுக்குத் தேவைப்படும் பெயிண்டுகள், வார்னிஷ் தயாரித்தல்.
26) மருந்துகள் தயாரிக்கத் தேவைப்படும் அடிப்படை மருந்துப் பொருட்கள்
27) விவசாயத்திற்குத் தேவைப்படும் உரங்கள் தயாரித்தல்.
கூட்டுறவு :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டுறவு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். கூட்டுறவில் பணிபுரிய முன் வரும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்திடக் காஞ்சியில் கூட்டுறவு பயிற்சிச்சாலை ஒன்று உள்ளது. கூட்டுறவு வினியோக விற்பனைச் சங்கமும் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 1,25,000 பேர் கைத்தறி நெசவாளர்கள். இவர்களில் 70,000 பேர் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். பட்டு நெசவுக்காக சரிகை உற்பத்தி ஆலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. காமாட்சியம்மன் கூட்டுறவு நுற்பு ஆலை 1966 இல் தொடங்கப்பட்டது. 43 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இவ்வாலை 13,680 கதிர்களைக் கொண்டது. சுமார் 500 தொழிலாளர்கள் இங்குப் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் துயர்துடைக்க நிலவள வங்கிகளும் இயங்கி வருகின்றன. தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவை வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் பெற்று பல தொழில்களைத் தொடங்கினால் இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறும்.துயர்துடைக்க நிலவள வங்கிகளும் இயங்கி வருகின்றன. தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவை வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் பெற்று பல தொழில்களைத் தொடங்கினால் இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தயாரித்தல், கூட்டுறவு, காஞ்சிபுரம், தொழில், தமிழக, தேவைப்படும், பொருட்கள், பெட்டிகள், கழகம், tamilnadu, மாவட்டங்கள், தமிழ்நாடு, தொழில்களைத், செய்தல், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஆகியவை, வளர்ச்சிக், kancheepuram, இயங்கி, வருகின்றன, முதலீட்டுக், வழங்கும், சலுகைகள், மென்மேலும், வளர்ச்சியுறும், | , இம்மாவட்டம், தொடங்கினால், கடன், உதவிகள், பெற்று, வங்கிகளும், துயர்துடைக்க, செயிண்ட், இந்தியா, எண்ணெய், கோபைன், கண்ணாடித், தொடங்கப்பட்டது, முதலீட்டில், மேஜைகள், உற்பத்தி, பேர், அரசு, districts, உபகரணங்கள், information, பைகள், நிலவள