ஈரோடு - தமிழக மாவட்டங்கள்
கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்:
ஈரோட்டிலே கஸ்தூரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கட முடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார்சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்தூரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார்சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" செய்தி வெட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து:
ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகர்களுக்கும், சென்னைக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர் விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் 9194 கி.மீ. உள்ளதாம்.
அ) ஈரோடு - பவானி, சித்தோடு, பெருந்துறை, விஜயமங்கலம் வழியாக செல்லும் சாலை கர்நாடக மாநிலத்தை அடைகிறது.
ஆ) ஈரோடு - அந்தியூர், பர்கூர் வழிச்சாலை தமிழகத்தையும், கர்நாடகத்தையும் இணைக்கிறது. பவானியிலும், ஈரோட்டிலும் காவிரியைக் கடக்கும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இருப்புப் பாதை:
முக்கிய புகைவண்டி நிலையங்கள்: ஈரோடு, ஊத்துக்குளி, பெருந்துறை, ஊஞ்சலூர், கொடுமுடி, பாசூர், ஈங்கூர். இம்மாவட்டத்தில் உள்ள இரயில் பாதை அகன்ற இரயில் பாதையாகும். ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.
நீர்வழி:
ஈ.வே.ராமசாமி |
தாளவாடி மலை:
இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.
மாவட்ட பெரியோர்:
தமிழக மக்களால் 'பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி பெரியார் ஈரோட்டில் பிறந்து, வளர்ந்தவர். நரேந்திர தேவர், காங்கிரஸ் தியாகி. கொடிகாத்த குமரன் பிறந்த இடம் சென்னி மலைதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈரோடு - Erode - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஈரோடு, உள்ளது, தமிழக, tamilnadu, போக்குவரத்து, மாவட்டங்கள், நாயக்கர், பெரியார், கஸ்தூரி, இங்கு, தமிழ்நாட்டுத், தகவல்கள், இரயில், பெருந்துறை, இம்மாவட்டத்தின், பாதை, பாதையாகும், | , எழில், இயற்கை, ராமசாமி, சாலை, செய்தி, பள்ளி, information, கோவில், பெருமாள், கொண்ட, நடைபெறுகிறது, ரங்கப், உள்ள, districts, erode