ஈரோடு - தமிழக மாவட்டங்கள்
எண்ணெய்:
எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
கால்நடை வளர்ப்பு:
ஈரோட்டு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும்தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன.கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.
வழிபாட்டிடங்கள்:
பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை முருகன் கோவில், கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில், பாரியூர் அம்மன் கோவில், சிவன்மலை, ஈரோடு பெரியமாரியம்மன் கோவில், திண்டல்மலை முருகன் கோவில் முதலியன.
விழாக்கள்:
ஈரோடு மாரியம்மன் பண்டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னிமலை தைபூசத் திருவிழா, சிவன்மலை தேரோட்டம், பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு.
சுற்றுலாத்தலங்கள்:
பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலூர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல்புதைபொருள் ஆய்வு இடம்.
பண்ணாரியம்மன் கோவில் |
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும்,தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
பவானி முக்கூடல்:
காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்தூண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக்
கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈரோடு - Erode - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், ஈரோடு, தமிழக, பவானி, பண்ணாரியம்மன், tamilnadu, மாவட்டங்கள், கிழக்கு, பிரயாகை, வழியாக, பெரிய, இங்கு, இரண்டு, தமிழ்நாட்டுத், தொலைவில், தகவல்கள், பண்ணாரி, உள்ளது, மாரியம்மன், மைல், அமைந்துள்ளது, சுமார், தீர்த்தக், காலத்தில், வாயில், தற்போது, | , வந்து, அடியில், திருக்கோவில், மண்டபம், இடத்தில், செல்லலாம், சிவன்மலை, காங்கேயம், கால்நடை, வளர்ப்பு, மாவட்டத்தில், இங்குள்ள, எண்ணெய், erode, districts, information, பர்கூர், வளர்க்கப்படுகின்றன, பண்டிகை, திருவிழா, கூடுதுறை, அணைக்கட்டு, முருகன், சென்னிமலை, தாளவாடி, அந்தியூர், சந்தையும், சுற்றுலா