கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
சோப்பு உற்பத்தி:
இம்மாவட்டத்தில் உள்ள சிறுதொழில்களில் சோப்பு உற்பத்தி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சோப்பு, பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர இத்தொழிலுக்குத் தேவையான சோடியம் சிலிகேட் என்னும் கச்சாப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது. இது ஆண்டுக்கு 500 டன் தயாரிக்கிறது.
சிக்கோனா தொழிற்சாலை:
தமிழக அரசின் முயற்சியால் 1955ல் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு குனைன் சல்பேட் மற்றும் குனைன் ஹைட்ரோ குளோரைட் போன்ற கொய்னாப் பொருட்கள், குனிடின் சல்பேட், மருந்து போன்றவையும், இதுதவிர நறுமணத் தைலங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் தொழில் முதலீடுகள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இதுவரை 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது. அவற்றில் பத்துத் தொழிற்பிரிவுகள் பொதுத் துறையின் கீழும், மற்ற 36 தொழிற்பிரிவுகள் கூட்டுத்துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன. இதில் அரசு தொழிற்கழகத்தின் முதலீடு சுமார் 600 கோடி ஆகும். இதனால் 20,000 பேர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
1979-ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையம் தொடங்கப்பட்ட பின்னர் 10 ஆயிரத்திற்கு அதிகமான சிறுதொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
1960ஆம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் உருவாக்கப்பட்ட பின்னர் பின்வரும் கிராமத்தொழில்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. சோப்பு, தோல், செக்கு, எண்ணெய், சுண்ணாம்புத் தொழில், தேனீ வளர்ப்பு, காலணி தயாரித்தல், மட்பாண்டம் தச்சு, கொல்லுத்தொழில், பிரம்புதொழில் முதலியவை வளர்ந்து வருகின்றன.
தொழிற்பேட்டைகள்:
குறிஞ்சி, திருப்பூர், சிறுமுகை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுதொழிற்கள் வளர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கு இத்தொழிற்பேட்டைகள் இடங்களைத் தந்துள்ளது.
ஜி.டி.நாயுடு |
ஜி.டி.நாயுடு ஒரு தொழில் மனிதர் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளரும் ஆவார். பேருந்து போக்குவரத்தை நடத்திய நாயுடு அதை நன்கு புரிந்து கொண்டு, மோட்டாரில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து சாதனை புரிந்தார். அவர் கண்டு பிடிப்புகளில் சில-
1. மோட்டாரில், ரேடியேட்டருக்கு சமமான இயந்திரம்
2. என்ஜின் ஓடும்போது அதன் துடிப்பை அறியும் கருவி
3. பேருந்து அதிர்ச்சியை சோதிப்பதற்கான இயந்திரம்
4. கேமராவில் டிஸ்டண்ட் அட்ஜஸ்டர்
5. ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரம்
6. குறைந்த விலை வானொலி
7. ரேஸாண்ட் என்னும் மின்விசை மழிப்பான்
8. ஒரு அங்குலத்தில் இருநுற்றில் ஒரு பாகம் கன அளவுள்ள பிளேடு இது ஓராண்டுக்கு ஒரு நபருக்கு பயன்படும்.
இதுபோன்ற 80 வகையான கண்டுபிடிப்புகள். வேளாண்மையில் புதிய வகை விளைச்சலை உண்டாக்கக்கூடிய நாயுடு காட்டன் என்ற பருத்தி ஜெர்மனிக்குச் சென்றது. அதிசய சோளச் செடி, பருத்திச்செடி, பெரியதுவரைச்செடி, கசப்பை இனிப்பாக மாற்றுவது, விதையில்லாத பழம் வாழை மரத்துக்கு பூச்சி தடுப்பான் போன்ற பலவற்றை கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.
மாணவர்களுக்கு பாலிடெக்னிக்கும், பொறியியல் கல்லுரியும் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், தமிழக, நாயுடு, கோயம்புத்தூர், மாவட்டங்கள், சோப்பு, tamilnadu, போன்ற, உற்பத்தி, தகவல்கள், தமிழ்நாட்டுத், இயந்திரம், பின்னர், ஆண்டு, | , வருகின்றன, கீழும், பேருந்து, தொழிற்பேட்டைகள், மோட்டாரில், தொடங்கப்பட்டுள்ளன, அரசின், ஆண்டுக்கு, information, districts, coimbatore, சுமார், இதுதவிர, சல்பேட், குனைன், தொழிற்சாலை, என்னும், தொழிற்பிரிவுகள்