விஜயநகர் அரசு
விஜய நகர ஆட்சியில் கோயில்கட்டும் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தது. ராயகோபுரங்கள் எனப்படும் நுழைவாயில் கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகங்களில் சிற்பத்தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்கள் ஆகியன விஜயநகர கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்களாகும். மண்டபத்தூண்களில் வடிக்கப் பட்டுள்ள. சிற்பங்கள் கலைநயமிக்கவை. இந்த தூண் சிற்பங்களில் பெரும்பாலும் குதிரை உருவங்கள் இடம்பெற்றிருந்தன. பெரிய ஆலயங்களில் நூற்றுக்கால் மண்டபங்களும், ஆயிரங்கால் மண்டபங்களும் எழுப்பப்பட்டன. திருவிழாக்காலங்களில் இறைவனை அங்கு கொண்டுவந்து வைத்து வழிபடுவது வழக்கம். ஏற்கனவே கட்டப்பட்ட ஆலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் அம்மனுக்கு என தனி ஆலயங்கள் அக்காலத்தில் அமைக்கப்பட்டன.
யானை ரதம்-ஹம்பி இடிபாடுகள் |
வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் அந்தந்தப்பகுதிகளில் புகழ்பெற்றிருந்தன. வடமொழி மற்றும் தெலுங்கு இலக்கியம் விஐய நகர காலத்தில் மகத்தான வளர்ச்சி பெற்றது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது. அவரே வடமொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றிருந்தார். அவரது அவைப் புலவரான அல்லசானி பெத்தண்ணா தெலுங்கு இலக்கிய வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள்ளர். எனவே, விஐய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுத் தொண்டு பன்முகத்தன்மை கொண்டதாகவும் சிறப்புடையதாகவும் திகழ்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, விஜய, தெலுங்கு, இந்திய, விஜயநகர், வடமொழி, அரசு, விஐய, பெற்றது, இலக்கிய, அவரது, வளர்ச்சி, கட்டிடக்கலையின், கோபுரங்கள், இந்தியா, கோயில், விஜயநகர, ஆலயங்கள், மண்டபங்களும், ஹம்பி