வேலூர் கலகம்
இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சி விரிவடைந்த போது உள்நாட்டு அரசர்களும் அவர்களை அண்டியிருந்தவர்களும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஒன்று அவர்கள் அடங்கிப் போனார்கள் அல்லது கிளர்ந்து எழுந்தார்கள். இத்தகைய கிளர்ச்சிகள் தொலைநோக்குப் பார்வையுடனோ கொள்கையுடனோ நடத்தப்படவில்லை. மாறாக, உள்நாட்டு அரசர்கள் தாங்கள் இழந்த பகுதியை மீட்கவும், பழைய நிலமானிய அமைப்பை மீண்டும் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். பூலித்தேவர், கான் சாகிப், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்ற தனிநபர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை கிடையாது, ஆனால், இந்த தலைவர்கள் ஒன்றுபட்ட காரணத்துக்காக அல்லது கொள்கைக்காக சாமானிய மக்களை ஒன்று திரட்டத் தவறினார்கள். தேசியம், அரசியல் விழிப்புணர்வு ஒன்றுபட்ட போராட்டம் என்ற இந்த கருத்துக்கள் பிந்தைய நாட்களிலேதான் தென்பட்டன.
![]() |
வேலூர் கோட்டை |
1806ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்த கிளர்ச்சியிலிருந்து தன்மை ரீதியாக வேறுபடுகிறது. வேலூர்க் கலகம் சிப்பாய்களால் நடத்தப்பட்டது. முந்தைய கிளர்ச்சிகள் அந்தந்த பகுதியின் நலனுக்காக நடைபெற்றன. ஆட்சியாளர்கள் தங்களது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள கிளர்ந்தெழுந்தனர். ஆனால், வேலூர்க்கலகம் வணிக்குழுவின்கீழ் பணியாற்றிய சிப்பாய்களிடமிருந்து இயற்கையாய் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடாகும். இது வணிகக்குழுவிற்கு எதிராக சிப்பாய்கள் எழுப்பிய கண்டனக் குரலாகும். இந்த எதிர்ப்பு வருங்காலத்தில் எழவிருந்த கலகத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலூர் கலகம் , வேலூர், வரலாறு, இந்திய, கலகம், கிளர்ச்சிகள், ஒன்றுபட்ட, சிப்பாய்கள், அல்லது, முந்தைய, இந்தியா, உள்நாட்டு, ஒன்று